குருநாகல், புத்தளம் பகுதிகளில் கள ஆய்வு (படங்கள்)
(இக்பால் அலி)
வடமேல் மாகாணத்திலுள்ள புத்தளம் குருநாகல் ஆகிய இரு மாவட்டங்களிலும் முஸ்லிம்களின் நிலை குறித்து நேரடியாகக் கண்டறிந்து கொள்வதற்காக மேற் கொள்ளும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்திய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷய்க் என் பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி தலைமையில் ஆறுபேர் கொண்ட குழுவினர் இன்று பறகஹதெனிய தேசிய பாடசாலைக்கு விஜயம் மேற் கொண்டனர்.
பறகஹதெனிய தேசிய பாடசாலையில் பாடசாலை அதிபர் ஐ. அப்துர்ரஹ்மானின் ஏற்பாட்டில் இரு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. ஆண் மாணவர்களுக்கு வேறாகவும் பெண் மாணவிகளுக்கு வேறாகவும் இஸ்லாமிய ஒழுக்கவியல் சம்மந்தமான போதனைகள் இங்கு வருகை தந்த விசேட வளவாளர்கள் மூலம் புகட்டப்பட்டன. மாணவர்களுக்கு சிறந்த பரிசில்களும் வழங்கப்பட்டன.
இந்தக் குழுவில் புத்தளம் காஸிமியா அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷய்க் அப்துல்லா. மன்பஷல் சாலிஹா மகளீர் அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷய்க் அலிக்கான் மதனி. பறகஹதெனிய ஸலபிய்யா அரபுக் கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷய்க் எ. எம். முஜிபுர்ரஹ்மான் மதனி, கொழும்பு மஹரகம கபூரியா அரபுக் கல்லூரி விரிவுரையாளர்களான அஷ்ஷய்க் ஹசன் பாரிஸ் மதனி, அஷ்ஷய்க் பௌசுல் அலவி மதனி உள்ளிவர்கள் பங்கேற்றனர்.
இவர்கள் இரு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள், குர்ஆன் மத்ரஸா, அங்குள்ள ஆசிரியர் குழாவினருடனான புரிந்துணர்வு ரீதியிலான் சந்திப்பு, அகதி முகாம், பின்தங்கிய கிராமங்களுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவித்தனர்.
அதேவேளை பறகஹதெனிய ஸலபிய்யா அரபுக் கல்லூரிக்கும் இவர்கள் இன்று விஜயம் செய்தனர்.
இக்பால் அலி எழுதியுள்ளதை வாசிக்கும் பொழுது நல்லதொரு முயற்சி என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.
ReplyDeleteபாடசாலைகள், மதரசாக்கள், அகதி முகாம்கள் என்பவற்றுக்குச் சென்று வெறுமனே ஒழுக்கவியல் சம்மந்தமான போதனைகளை மட்டும் செய்யாமல், குறைந்த பட்சம் மேற்படி இரண்டு மாவட்டங்களினதும் முஸ்லிம்களின் கல்வித்தரம், வாழ்க்கை நிலைமை, பொருளாதார நிலைமை, மார்க்க அறிவு போன்ற விடயங்கள் குறித்து ஆய்வுகள்
செய்யப் பட்டு, புள்ளிவிபரங்கள் பெறப் பட்டு, அவற்றின் அடிப்படையில் தேவையான பணிகள் முன்னேத்க்கப் பட வேண்டும்.
பாடசாலைக்கும், மதரசாவுக்கும் வராத மக்கள் அணுகப் பட வேண்டும். குறைந்த பட்சம் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று ஆய்வுகள் மேற்கொள்ளப் பட வேண்டும். மேற்படி பெயர் குறிப்பிடப் பட்டுள்ள குழுவில் உள்ள அநேகமானவர்கள், அல்லது அனைவருமே
இளம் வயதைக் கடந்த, மூத்த மார்க்க அறிஞர்களாக உள்ளனர். இவர்களின் வழிகாட்டலின் கீழ், தன்னார்வ இளைஞர் குழு ஒன்று அமைக்க பட்டு களத்தில் இறக்கப் பட வேண்டும்.
குருநாகல், புத்தளம், அனுராதபுரம் போன்று பல்வேறு மாவட்டங்களிலும், வெளி இடங்களுடன் குறிப்பிடத்தக்க தொடர்புகளற்ற, பொருளாதாரத்தில் பின்தங்கிய முஸ்லிம் கிராமங்கள் உள்ளன. இவை குறித்து அதிகமான இலங்கை முஸ்லிம்கள் அறிந்திருப்பதில்லை. ஆகவே இக்கிராமங்கள் பற்றிய தகவல்கள் வெளிக்கொணரப் பட வேண்டும். திருமண உறவுகள் வெளி மாவட்டங்களுடன் ஊக்குவிக்கப் பட வேண்டும். இது ஒரு பிணைப்பை ஏற்படுத்தவும், பிரச்சனைகளை, தேவைகளை தேசிய மயப் படுத்தவும் உதவும்.
களத்தில் இறங்கியுள்ள ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியாவினர் இவை குறித்தும் கவனிப்பார்களா?