நோர்வேயில் இலங்கை தாய்மார் உண்ணாவிரதம்
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தாய்மார் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ஒஸ்லோவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் முன்னால் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கி வருகின்ற சிறுவர் நல காப்பகத்திலிருந்து தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரியே சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் முன் எடுக்கப்படுகின்றது.
குறித்த சிறுவர் நல காப்பகம், தமது பிள்ளைகளை பலவந்தமாக அழைத்து சென்றதாக பேராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தாய்மார் தெரிவித்துள்ளனர். எனினும், குறித்த இலங்கை தாய்மாரும் அவர்களது குடும்பமும் குழந்தைகளை உரிய வகையில் பராமரிக்கவில்லை என்று கூறியே நோர்வே அதிகாரிகள் காப்பகத்திற்கு அழைத்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. sfm
I wish norway goverment shouldn´t hand over this children for their parents because of those childrens parents did violence against them.Now this parents try to talking like they never did any mistake!
ReplyDelete