ஜப்பானில் அடுத்தடுத்து பூகம்பம் - சுனாமி எச்சரிக்கை
ஜப்பானில் இன்று அடுத்தடுத்து இரு முறை கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) வெளியிட்டுள்ள செய்தியில்,
ஜப்பானின் ஹோன்சூகு மாகாணத்தின் மியாக்கோ கடற்கரையில் 9.7 கி. மீ. ஆழத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை 7.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுககம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆகவும், 30 நிமிடத்திற்கு பின் மீண்டும் அதே கடற்கரை பகுதியின் 107கி.மீ. தொலைவில், 34 கி.மீ. கடல் ஆழத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதாக யு.எஸ்.ஜி.எஸ். தகவல் வெளியிட்டுள்ளது.

Post a Comment