யுனிசெப் பிரதிநிதியுடன் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு (படங்கள்)
(எப்.எம்.பர்ஹான்)
இலங்கையில் 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2018ம் ஆண்டு வரையிலான 5 வருட காலப்பகுதியில் சிறுவர்கள் தொடர்பான பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்கு யுனிசெப் நிறுவனத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் கரீன் ஹால்சொப் இணக்கம் தெரிவித்தார். சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார பிரதியமைச்சர் கௌரவ எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ்வை அண்மையில் கொழும்பிலுள்ள அவரின் அமைச்சில் சந்தித்து கலந்துரையாடும் போது இவ்விணக்கம் தெரிவிக்கப்பட்டதாக பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் முகமட் சஜி தெரிவித்தார்.
இந் நிதியுதவி மூலம் சிறுவர்களின் கல்வி வளர்ச்சி, அவர்களின் சுகாதார மேம்பாடு, சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைத்தல் மற்றும் பாடசாலையில் அவர்களுக்கான சிறுவர் கழகங்கள் அமைத்தல் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் இந்நிதி மூலம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இச்சந்திப்பின் போது யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் றீஸா ஹுசைன் மற்றும் அமைச்சின் செயளாலர் எரிக் இலயப்பாராச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Post a Comment