இந்தியாவில் கண்ணாடி பள்ளிவாசல்
இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரின் தலைந்கரமான ஷில்லாங்கில் இந்தியாவின் முதல் கண்ணாடி மசூதி உருவாக்கப்பட்டுள்ளது.
இம்மசூதி உருவாக்கத்தில் பங்கு வகித்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சயீதுல்லா இம்மசூதியை கட்ட ஒன்றரை வருடங்கள் ஆனது என்றும் வடகிழக்கு இந்தியாவின் மிகப் பெரிய மசூதி என்றும் கூறினார்.
ஷில்லாங்கில் உள்ள உம்ஷிரிபி ஆற்றின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள நான்கு தளங்களை கொண்டுள்ள இம்மசூதி 120 அடி உயரமும் 61 அடி அகலமும் கொண்டுள்ளது. இரவில் மசூதியின் கண்ணாடி ஒளிர்வது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இம்மசூதியின் உள்ளேயே மெஹர்பா எனும் அனாதை காப்பகமும் நூலகமும் இஸ்லாத்தை குறித்து விவாதிப்பதற்கான மர்கசும் அமைக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 18 அன்று மத்திய சட்ட மற்றும் சிறுபான்மையினருக்கான அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் துணை அமைச்சர் வின்செண்ட் இம்மசூதியின் திறப்பு விழாவில் கலந்து கொள்கின்றனர். inneram

Post a Comment