லண்டன் தீவிபத்தில் 4 குழந்தைகள் வபாத்
பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்தவர் அப்துல் ஷகூர் (43). இவருடைய மனைவி சுபா உஸ்மானி. இருவரும் டாக்டர்கள். இவர்களுக்கு 5 குழந்தைகள். சவுதி அரேபியாவில் சில ஆண்டுகள் வசித்தனர். அதன்பின், இங்கிலாந்தின் லண்டன் புறநகரில் உள்ள எசக்ஸ் பகுதியில் ஹார்லோ என்ற இடத்தில் வசித்தனர். வீட்டில் அனைவரும் நேற்று தூங்கி கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றியது. தீயில் சுபா, இவருடைய மகள் ஹிரா (12), மகன்கள் சோகைப் (11), முனீப் (9), ரேயான் (6) ஆகியோர் கருகி பரிதாபமாக இறந்தனர். மற்றொரு மகள் மஹீன் (3) பலத்த தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து எசக்ஸ் நகர போலீசார் கூறியதாவது: எசக்ஸ் நகர வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் தீயில் 4 குழந்தைகளும் அவர்களுடைய தாயும் இறந்துள்ளனர். இது வருத்தம் அளிக்கிறது. கீழ் தளத்தில் எரிபொருள் ஊற்றி தீ வைத்ததற்கான தடயங்களை புலனாய்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். மேல் தளத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் தீயில் கருகி பலியானது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. குடும்பத்தை காப்பாற்ற முகமது ஷகூர் போராடி இருக்கிறார். அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு வெளியில் ஒரு கார் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கார் முகமது குடும்பத்துக்கு சொந்தமானது அல்ல. இதுவும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் முகமது குடும்பத்தை கொலை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வீட்டுக்கு யாராவது தீ வைத்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் உள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.

Post a Comment