ஆசுகவி அன்புடீன் முதலமைச்சர் விருது பெறுகின்றார்
திருகோணமலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெறவுள்ள 2012ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த கலாபுசணம் ஆசுகவி அன்புடீன் முதலமைச்சர் விருது பெறுகின்றார்.
கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டம் அட்டாளைச்சேனைப் பிரதேசம் பாலமுனை கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது இயற்பெயர் கலந்தர் லெப்பை.
அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாரை மாவட்ட தலைவராகவும், தென்கிழக்கு கலாச்சார பேரவை செயலாளராகவும், எழுவான் பத்திரிகை வெளீட்டக தவிசாளராகவும், அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார பேரவை உப தலைவராகவும், தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின்(நுஜா) ஆலோசகராகவும்,அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளராகவும், அட்டாளைச்சேனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினராகவும், யங்லயன்ஸ் விளையாட்டுக் கழக ஆலோசகராகவும் இவர் ஆற்றி வரும் சமூக சமய கலாசார பணிகள் எடுத்தாளத்தக்கன.
முகங்கள்,ஐந்து தூண்கள், சாமரையில் மொழி கலந்து, மரணமல்ல ஜனனம்- முதலான கவிதைத் தொகுதிகளை வெளியீடு செய்துள்ள இவர் நெருப்பு வாசல்( சிறுகதை) சிலந்தி தைத்த ஆடை( கட்டுரை) ஆகிய தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார்.
36 வருடங்கள் தபால் திணைக்களத்தில் கடமை புரிந்து 2011 ஆகஸ்டில் ஓய்வு பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் விருது பெறுவது நம் ஊருக்கு கிடைத்த கௌரவம்.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
கவிஞர் அன்புடீன் ஐயா அவர்களுக்கு
மு.ந.மு. நசீல்
பிரன்ஸ் கொம்
பிரதான வீதி
அட்டாளைச்சேனை