Header Ads



யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம்கள் தொடர்பாக ஆராய்வு (படங்கள் இணைப்பு)

யாழ் மாவட்டத்தில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைக் கண்டறியும் மீள்ளாய்வுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா  தலைமையில் நடைபெற்றது.  ஒஸ்மானியக் கல்லூரியில் மேற்படி விடயம் தொடர்பான கலந்துரையாடல் இன்றையதினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.
  
யாழ் மாவட்டம் முழுமையிலும் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கிவரும் இடர்பாடுகள், பிரச்சினைகளைக் கண்டறியும் முகமாக இன்றையதினம் மேற்படி கலந்துரையாடல் யாழ் மாநகர சபை உறுப்பினர் சுபியான் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டது.

இதன்போது மீள்குடியேற்றம், வாழ்வாதாரம், அத்தியாவசிய தேவைகள், மின்சாரம், வீட்டுத்திட்டம், கல்வி, சுகாதாரம், காணிகளின் உரிமம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் தொடர்பில் தமது பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இவை தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்ட அமைச்சர் அவர்கள் பிரச்சினைகளுக்கு துறைசார்ந்தவர்களடாக உரிய வகையில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிமொழி வழங்கியதுடன் பாதிப்புக்குள்ளாகின்ற மக்களுக்காகவே நாம் ஆதரவுக் குரல் கொடுத்து வருகின்றோம், யாழ் மாவட்டத்திலிருந்து முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது அதற்கு எதிராக நாம் குரல் கொடுத்ததுடன், தொடர்ந்தும் ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றோம் என்றும் மாதமொரு தடவையாவது முஸ்லிம் மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய உள்ளதாகவும் தொவித்தார்.

இதனிடையே சமூகத்தின் மேம்பாட்டிற்காக எல்லோரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். 















No comments

Powered by Blogger.