முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையை அரசாங்கம் புறக்கணித்துவிட்டது - ஹசன் அலி சீற்றம்
A.A.M.
கிழக்கு மாகாண சபையில் அரசாங்கம் ஆட்சிமைப்பதற்கு பிரதான காரணியாக இருந்த முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கை, மாகாதண சபையின் முதல் அமர்விலேயே நிராகரிக்கப்பட்ட விடயமானது தமக்கு பேரதிர்ச்சியளிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி யாழ் முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.
தொலைபேசி மூலம் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் ஹசன் அலி மேலும் குறிப்பிட்டதாவது,
திவிநெகுமே சட்ட மூலம் கிழக்கு மாகாண சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட முன்னர் அமைச்சர் பஸில் ராஜபக்ஸ என்னுடன் தொடர்புகொண்டார். குறித்த சட்டமூலத்திற்கு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை கோரினார். அதற்கு நான் சட்டமூலம் குறித்து ஆராய்ந்தபின் முஸ்லிம் காங்கிரஸ் தனது முடிவை அறிவிக்கும் என்றேன். அதற்கு அவர் இதுதொடர்பில் தான் அமெரிக்காவிலுள்ள ரவூப் ஹக்கீமுடன் பேசுவதாக குறிப்பிட்டார்.
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் திவிநெகுமே சட்டமூலத்தை கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்ற முன்னர் அதுதொடர்பில் ஆராய வேண்டுமென்றும் எனவே அதற்கு கால அவகாசம் கோர வேண்டுமென்றும் கூறியிருந்தார். கட்சியின் செயலாளர் என்றவகையில் இந்த அறிவித்தலை நான் கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும், கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஜெமீலுக்கும் அறியப்படுத்தினேன்.
கிழக்கு மாகாண சபையில் திவிநெகுமே சட்டம் நிறைவேற்றப்படாது, அதுதொடர்பில் ஆராய்வோம் என்றும் நாம் எதிர்பார்த்திருந்த நிலையிலேயே அந்த பேரதிர்ச்சி எமது காதுகளை வந்தடைந்தது. கிழக்கு மாகாண சபையில் திவிநெகுமே சட்டமூலமாக்கப்பட்டமை வேதனையளிக்கிறது. முஸ்லிம் சமூகம் அதுதொடர்பில் நியாயமான எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தது உண்மைதான்.
கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத்தலைவர் ஜெமீல், முஸ்லிம் காங்கிரஸ் மாகாண உறுப்பினர்களை தவறாக வழிநடாத்தியுள்ளார். இதுதொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள் எம்மிடம் முறையிட்டுள்ளனர்.
மேலும் அரசாங்க உயர்தரப்பினர் சிலர் முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களை தவறாக வழிநடத்தியுள்ளனர். அவர்களுக்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைமை திவிநெகுமே சட்டமூலத்திற்கு ஆதரவளிக்கிறது என்ற பொய்யான தகவல் கூறப்பட்டுள்ளது. இங்கு ஏதோ சூழ்ச்சி சதித்திட்டம் நடைபெற்றுள்ளது. எனவே இதுதொடர்பில் பூரண விசாரணைகளை மேற்கொள்ள முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடு திரும்பியவுடன் இதுகுறித்து முழு விசாரணை மேற்கொள்ளப்படும். கட்சியின் தீர்மானங்கள், கட்டுக்கோப்புகள் முக்கியமானவை. இதில் எவரும் தவறாக அல்லது முறைகேடாக நடந்து கொண்டுள்ளார்களா என்பது தொடர்பில் ஆராய்வோம்.
திவிநெகுமே திட்டத்தை முற்றாக எதிர்க்கும் நோக்கத்தை முஸ்லிம் காங்கிரஸ் கொண்டிருக்கவில்லை. அதில் சில சாதகங்களும் உள்ளன. பாதகங்களும் உள்ளன. எனவேதான் அதனை மேலும் ஆராயவேண்டும் என்பதற்காக கால அவகாசம் கோரினோம். ஆனால் எமது கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் முதல் அமர்விலேயே முஸ்லிம் காங்கிரஸின் நியாயமான கோரிக்கை புறக்கணிக்கப்பட்டமையானது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மாகாண சபையில் அரசாங்கம் ஆட்சியமைப்பதற்கு தலைபோன்று நின்று செயற்பட்ட எமது கட்சி இதுகுறித்து வேதனைப்படுகிறது எனவும் ஹசன் அலி யாழ் முஸ்லிம் இணையத்திற்கு வழங்கிய சிறப்புச் செவ்வியில் குறிப்பிட்டார்.

இப்ப அழுது யாருக்கு என்ன பிரயோசனம் . ஹசன் அலி அடுத்த நாடகம் ஆரம்பிக்கர் போல
ReplyDelete2012 இன் சிறந்த நகைச்சுவை
ReplyDeleteகொஞ்சம் உங்க கட்சியைசேர்ந்த மாகாணசபை விவசாயதுறை அமைசரிடம் இதன் நிலமைகுறிது நீங்கள் வினவினால் அவர் மிக தெளிவாக விளக்கம் தருவார் நேற்றைய மாகாண சபை உரையைபோல்!!!
ReplyDeleteஹஸன் அலி சார், இந்த ஜெமீலைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ தெரியாது. சொல்லுகின்றேன் கேளுங்கள். இவர் ஒரு தீவிர ஷீஆ ஆதரவாளர். ஈரானின் அபிமானியான இவரை வழிநடாத்த ஈரானை இலங்கை அரசு பயன்படுத்தியுள்ளது. அவ்வளவுதான்.
ReplyDeleteஎன்ன நடக்கிறது எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குல்! தலைவர்,செயளாலர்,தவிசாளர்,பா.உருப்பினர்கள்,மாகாண சபை உருப்பினர்கள்,அதியுயர் பீடம் என அனைவரும் முரண் பட்ட கருத்துகள் மற்றும் ஒற்றுமை இன்மையால் கடந்த தேர்தலுக்கு பின் கட்சியின் மேல் மக்கலுகு நம்பிக்கை குறைந்து வருகின்றது என்பதை கவணத்தில் கொள்ள வேண்டும்.
ReplyDeleteமுஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான ஹாபிஸ் நஷீர் அஹமட் "இந்த சட்டமூலம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏழு பேரும் கலந்தாலோசித்த பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது" என மாகாண அமைச்சர் குறிப்பிட்டார்.
ஹஸனலி என்ன? எந்த அலி சீறினாலும் ஒன்றுமே நடக்கமாட்டாது. ஹக்கீமின் சரணாகதி அரசியலுக்கு முன் இவர்களின் எந்தச் சீற்றமும் சரிப்பட்டு வராது. சிங்களம் தெரிந்த நமது சகோதரர்கள் இதனைப் படித்துப் பாருங்கள்... என்ன நடந்தது என்பதனைப் புரிந்து கொள்வீர்கள். வெட்கம்... வெட்கம்.. முழுச் சமுதாயத்துக்குமே வெட்கம்.. சிங்கள அரசிடம் இந்தளவு சரணாகதியா? http://lankacnews.com/sinhala/main-news/83035/
ReplyDeleteஏ.எச்.சித்தீக் காரியப்பர்
வெட்கக் கேடு....!
ReplyDelete