இலங்கை ஹாஜிகளின் கவலை
(தினகரன்)
இலங்கையிலிருந்து இம்முறை ஹஜ் கட மையை நிறைவேற் றுவதற்காகச் சென்றிருப் பவர்களில் ஒரு சிறு தொகையினருக்கு மாத்தி ரமே மினாவில் தங்குவ தற்கு அனுமதி கிடைக்கப் பெற்றிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இம்முறை 2800 இலங்கை முஸ்லிம்களுக்கு சவூதிய அரேபிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இவர்களை 45 முகவர் நிலையங்கள் ஊடாக அனுப்புவதற்கு இலங்கையின் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் நடவடிக்கை எடுத்திருப்பதாக உள்ளூர் வட்டாரங்கள் கூறின. என்றாலும் ஐந்து முகவர் நிலையங்கள் ஊடாக சென்றிருப்பவர்களுக்கு மாத்திரமே மினாவில் தங்குவதற்கு அனுமதி கிடைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்த ஐந்து முகவர் நிலையங்கள் தவிர்ந்த ஏனைய 40 முகவர் நிலையங்கள் ஊடாகவும் ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றிருப்பவர்கள் மினாவுக்கு வெளியே தரித்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலைமைக்கு முகம் கொடுத்திருக்கும் இலங்கை ஹஜ்ஜாஜிகள் பெரிதும் கவலை அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்பவர்கள் துல்ஹிஜ்ஜா 8 ஆம் நாள் மினாவில் தரித்து இருப்பது கட்டாயக் கடமை என்பது தெரிந்ததே.

அல்லாஹ் அவர்களின் நோக்கம், முயற்சி என்பவற்றின் காரணமாக ஹஜ்ஜை அங்கீகரித்துக் கூலி வழங்க துஆ செய்வோம்.
ReplyDeleteஇது ஹஜ்ஜுக்குச் சென்றவர்களின் தவறு அல்ல.
தமக்குள்ள சண்டை இடத்தான் நமது முஸ்லிம் அமைச்சர்களுக்கு நேரம் இருந்ததே தவிர, இவற்றைப் பற்றி முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய யாருமில்லை.
ஹஜ்ஜாஜிகளே பொறுமை பொறுமை....
ReplyDeleteநீங்கள் போயிருப்பது சொகுசுப் பயணம் அல்ல...
இறுதிப் பயணம்....
இந்த சின்ன விடயங்களுக்கெல்லாம் கவலைப்பட்டால்...
நீங்கள் எப்படி உண்மையான ஹஜ்ஜரிகளாக மாறுவது...
இப்றாஹீம் நபியின் பொறுமையில் ஒரு துளியாவது உங்களிடம் இல்லையென்றால்...
உங்கள் ஹஜ் 5 சதத்துக்கும் பெறுமதியற்றதாகிவிடும்....
ithu maddum allathu inku sri lanka hajkal addaihera thunpamu thuyaramum sollyalathu mattaya naddavarhaludan opdum pothu kal thusukkum kuraivana savaia inku sri lanka hajkalukku nadakintrathu ithai nan kankudaha kankinran amachar fawsi irunthu inku hjakalin pothihal param adupavar varai thankal lapathaiya kannaha kolhirarhal allahthan ivarhali narvalipaduthavandum ithupati malathihaveparrankalukku 00966508616652ku thidarpu kollum
ReplyDelete@ INAS,
ReplyDeleteஹாஜிகளை கிண்டல் பண்ணுகின்றீர்களா அல்லது மார்க்கத்தை பரிகசிக்கின்ரீர்களா?
எங்கே எந்த அறிவுரை பொருத்தம் என்று புரிந்து பதிவு செய்யுங்கள்.
ஹாஜிகள் மக்காவில் மட்டன் பிரியாணி கேட்டு பிரச்சினை பண்ணியிருந்தால், உங்கள் அறிவுரை பொருத்தமாக இருந்திருக்கும்.
இது ஹஜ்ஜின் முக்கிய அம்சம் சம்மந்தப் பட்ட விடயம். தயவு செய்து ஹஜ்ஜின் விடயங்கள் குறித்து தெரிந்து கொண்டு கருத்துப் பதிவதுதான் பொருத்தம். அரபா, மினா குறித்தெல்லாம் தெரியாவிட்டால், தெரிந்து கொள்ளும் வரையாவது பேசாமல் இருப்பதே சிறந்தது. இப்படியே விட்டால், ஹஜ்ஜையும் கூட சின்ன விடயம் என்று ஆக்கிவிட ஒரு கூட்டம் காத்துக் கிடக்கின்றது.
இதில் ஹாஜிகளைக் குறை சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. இது
ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்பவர்கள், ஹஜ்ஜுக்கு பொறுப்பான அதிகாரிகள், அமைச்சர்கள் கவனம் செலுத்தியிருக்க வேண்டிய விடயம்.