Header Ads



பேஸ்புக் பார்த்தால்.. ஒரு பளார் விடு..!


பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தான் நேரத்தை வீணில் செலவழிப்பதைக் கண்டால் தன்னை பளாரென்று அறைந்துவிடும் படி கூறி  பெண் ஊழியர் ஒருவரை வேலைக்கு வைத்துள்ளார் கணினி நிபுணர் ஒருவர்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க கணினி நிபுணர் மனீஷ் சேத்தி என்ற இயற்பெயருடைய அவர் சான் ஃப்ரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்தவர். 'க்ரைய்க்லிஸ்ட்' என்னும் அறிவிப்புத் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பின் படி மணி நேரத்திற்கு எட்டு டாலர்கள் என்று சம்பளம் பேசி பெண் ஊழியர் ஒருவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். அந்தப் பெண்ணின் வேலை, முதலாளி ஃபேஸ்புக் பார்ப்பதை கண்டுவிட்டால், அவர் முகத்தில் பளாரென்று அறைவதுதானாம். 

சரி, இதனால் தனக்கென்ன ஆதாயம்  என்று மனீஷ் சேத்தி சொல்வது  என்ன தெரியுமா? அவருடைய செயற்திறன் வேலைநாள்களில் 35 விழுக்காட்டிலிருந்து 98 விழுக்காடாக மாறி, தேறி, ஏறியுள்ளதாம். "இது வழக்கத்திலில்லாத உந்துசக்தி" என்கிறார் சேத்தி.

"ஒவ்வொரு வாரமும் எனது  பொறுப்பான 19 மணிநேரங்களை ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் விழுங்கி வந்தன. ஆகவே தான் இப்படி ஒரு வழிமுறையைக் கொண்டு என்னை மீட்டெடுக்கிறேன்" என்கிறார் சேத்தி.

ஃபேஸ்புக் போன்ற சமூக பொழுதுபோக்கு  என்று வந்தால், இத்தகைய ஆக்கப்பூர்வமான உணர்வுகளில் நாம் எந்தளவு சே(ர்)த்தி? .inneram

1 comment:

  1. இதென்ன பைத்தியகாரத்தனம்?

    கன்னத்தில் அறைவதற்கு மணிக்கு 8 டாலர் சம்பளத்தில் பெண் ஊழியர் வேறு....
    இது வேறு எங்கேயோ இடிக்கின்றதே......

    அது சரி, முதலில் இவருக்குத் திருமணம் ஆகி விட்டதா என்பதைக் கொஞ்சம் கவனியுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.