இது பெண்களின் கவலை..!
பெண்கள் முதுமை அடைவதை நினைத்து 29 வயதில் இருந்தே கவலைபட தொடங்குகின்றனர் என்கிறது லேட்டஸ்ட் ஆய்வு. சரும பராமரிப்பு லோஷன் தயாரிக்கும் லண்டன் நிறுவனம் ஒன்று 2 ஆயிரம் பெண்களிடம் கருத்துக்கணிப்பு மற்றும் ஆய்வு நடத்தியது. பெண்கள் மனதளவிலும் உடலளவிலும் முதுமையை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பது குறித்து இந்த ஆய்வு நடந்தது. அதில் தெரியவந்த தகவல்கள்,,
பெரும்பாலான பெண்கள் டீன்ஏஜில் அதாவது 20 வயது வரை முதுமை குறித்த சிந்தனை அறவே இல்லாமல் மகிழ்ச்சியாகவே உள்ளனர். 29 வயதுக்கு பிறகு அந்த சிந்தனை அவர்களை ஆட்டிப்படைக்கிறது. தங்கள் கவர்ச்சியான தோற்றத்துக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற கவலை மற்றும் சிந்தனை அதிகரிக்கிறது.
சற்று கடினமாக இருந்தாலும், இந்த சிந்தனையை தவிர்ப்பதுதான் நல்லது. முதுமை தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்து, அதை ஆரோக்கியமாக அணுகுவது எப்படி என்பது குறித்து சிந்திப்பது அவசியம். மாறாக முதுமை பற்றி கவலைப்படுவது மனம் மற்றும் உடல்நிலையை பாதிக்கும். முதுமை முன்கூட்டியே தாக்கும். இது ஆரோக்கியத்தை பாதித்து பல நோய்களை உண்டாக்கும். அதிக கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்த்து தினமும் உடற்பயிற்சி செய்தால் இது சாத்தியம். ஊட்டச்சத்துள்ள உணவு, தொடர் தியானம் மற்றும் உடற்பயிற்சி, நடைபயிற்சியுடன் அவ்வப்போது மருத்துவ பரிசோதனையும் செய்துகொண்டால் முதுமை கவலை, மனஉளைச்சல்கள் இல்லாமல், ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.

Post a Comment