கிழக்கு முஸ்லிம்களுக்கு பெருமை தேடிக்கொடுத்த நிந்தவூர் மாணவனுக்கு வரவேற்பு (படங்கள்)
(சுலைமான் றாபி)
2012 ஆண்டு அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலயத்தில் உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும் செல்வன். ZTM ஆஷிக் 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பரிது வட்டம் வீசுதல் நிகழ்ச்சியில் தங்கப்பதக்கமும் குண்டு போடுதல் நிகழ்ச்சியில் வெண்கலப் பதக்கமும் பெற்று கிழக்கு மண்ணிற்கு பெருமை தேடிக்கொடுத்த ஒரே ஒரு வீரராகின்றார்.
மாத்தறை ராஜபக்ச மைதானத்தில் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டியில் பரிது வட்டம் வீசுதலில் 37.73 மீற்றர் தூரம் ஏறிந்து தங்கப் பதக்கத்தினையும் குண்டு போடுதலில் 11 .85 மீற்றர் தூரம் ஏறிந்து வெண்கலப் பதக்கத்தினையும் சுவீகரித்தார்.
இதன் மூலம் தான் கல்வி கற்கும் நிந்தவூர் மதீனா மகா வித்தியாலயதிற்கும் கிழக்கு மாகாணதிற்கும் பெருமை தேடிக்கொடுத்ததுடன் மிக இள வயதில் அதிக திறமைகளை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் தங்க மகன் ஆஷிக் அவர்களுக்கு நேற்றைய தினம் புதன்கிழமை (17 .10 .2012 )தனது சொந்த பாடசாலையான நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலயத்தில் மாபெரும் கௌரவிப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் அல்ஹாஜ் அஹமது தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் அல் ஹாஜ் MTA தௌபீ, நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹாஜியாணி திருமதி SM ஜலீல், நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி SLM சலீம், சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர்களான MI இப்ராஹீம், A ஜாபிர் கபூர் மற்றும் வங்கி முகாமையாளர்களும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.





Post a Comment