Header Ads



திவிநெகுமே சட்டத்திற்கு ஆதரவாக நீதிமன்றம் செல்கிறது ஹெல உறுமய


திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு, எதிரான எதிர் மனுவை தாக்கல் செய்ய ஜாதிக ஹெல உறுமைய தயாராகிறது.

கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரரால் இந்த எதிர் மனு திங்கட்கிழமை உயர் நீதிமன்றில் தாக்கால் செய்ய திட்டமிட்டுள்ளதாக, ஹெல உறுமையவின் ஊடக பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள திவி நெகும சட்ட மூலம் தொடர்பில், வடமாகாண ஆளுனர் சார்பான கருத்து வெளியிட முடியாது என்று தெரிவித்து உயர் நீதிமன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராஜாவினால், மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையிலேயே, ஜாதிக ஹெல உறுமைய இவ்வாறு எதிர் மனுவை தாக்கல் செய்ய போவதாக அறிவித்துள்ளது. sfm

No comments

Powered by Blogger.