Header Ads



இலங்கை ஹாஜிகளும், மினாவின் உண்மை நிகழ்வுகளும்..!



(எமது இணையத்தின் சிறப்புச் செய்தியாளர் சகோதரர் இக்பால் அலி அமைச்சர் பௌஸி, முஸ்லிம் சமய கலாசாரப் பணிப்பாளர் வை. எல். எம் நவவி மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாருக் ஆகியோரிடம்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெற்ற தகவல்களின் தொகுப்பே இது)

(இக்பால் அலி)

இலங்கையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்றுள்ள 2800 ஹாஜிகளுக்கும் அவர்களது கடமைகளை நிறைவேற்றுவதற்கு அனைத்து வசதிகளையும் சிறப்பான முறையில் வழமைப்போல் ஹஜ் குழு ஏற்பாடு செய்துள்ளதாக சவூதி அரேபியாவிலிருந்து அமைச்சர் ஏ. எச்.எம் பௌசி தெரிவித்தார்.

ஹாஜிகள் துல்ஹஜ் பிறை 8ல் மினா நோக்கிச் சென்று அன்றைய தினம் இரவில் மினாவில் தங்கி பிறை 9 இல் அரபா நோக்கிச் செல்வார்கள் பின்னர் முஸ்தலிபாவுக்குச் சென்று மீண்டும் மினாவை வந்தடைந்து பிறை 13 வரை மினாவில் தரித்திருப்பார்கள் மினா, மஸ்தலிபா, ஆகிய இடங்களில் தரிப்பதும் அங்கு விதியாக்கப்பட்ட கிரியைகளில் ஈடுபடுவதும் ஹஜ் கடமைகளில் பிரதான செயற்பாடுகளாகும்.

உலக நாடுகளில் அனைத்திலிருந்தும் வருகின்ற ஹாஜிகளுக்கு இவ்விடங்களில் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கு சவூதி அரேபிய அரசு வசதிகளை செய்து கொடுத்துள்ளது இதற்காக தனியான அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உட்பட்ட அனைத்து தெற்காசிய நாடுகளுக்கும் இச்சேவைகளை வழங்குவதற்கு தெற்காசிய நாடுகளுக்கான ஹஜ் அமைப்பு செயற்பட்டு வருகின்றது இதன் தலைவரின் கீழ் முஅல்லிம் என அழைக்கப்படும் 110 சேவை வழங்கும் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இலங்கை ஹாஜிகள் 17, 42, 44, 53, 54, 58, 45, 46 ஆகிய முஅல்லிம்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை ஹஜ்முகவர்கள் இவர்களிடமிருந்து சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக உடன்படிக்கைகளிலும் அவர்களது ஹாஜிகளின் எண்ணிக்கைக்கு இணங்க கட்டணங்களை செலுத்தி சேவைகளைப் பெற்றுவருகின்றனர் இதுவரையில் இச்சேவைகள் தொடர்பில் எவ்விதமான பிரச்சினைகளும் ஏற்படவில்லை.

மினா பகுதிக்குறிய பிரதேசம் நபி (ஸல்) அவர்களது காலத்திலேயே ஜிப்ரீல் (அலை) மூலமாக காட்டப்பட்டுள்ளது. அதனை 'அல்ஹுதுத் அஸ்ஸரயிய்யா லிமினா' மினாவுக்கான சரீஅத் அடிப்படையிலான எல்லை' அதனை பதாதைகள் மூலமாகவும் காட்டப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது வருடம் தோரும் ஹாஜிகளது எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக மினாவில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் எல்லையை தாண்டியும் அமைக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இது சவூதி மற்றும் சர்வதேச மார்க்க அறிஞர்களது வழிகாட்டல்களுக்கு அமையவே சவூதி அரேபிய அரசு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான மார்க்க சட்டத்தீர்ப்பு (பத்வா) வழங்கப்பட்டுள்ளது அத்துடன் இலங்கை முகவர்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ள கூடாரங்கள் மினா எல்லைக்கு வெளியேயும் அமைந்து காணப்படுகின்றன.

இது விடயம் எமக்கும் இலங்கை ஹஜ் முகவர்களுக்கும் ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை. 1 முதல் 110 வரையான வழிகாட்டிகளில் (முஅல்லிம்களில்) 40 க்கும் 60 க்குமிடையிலான வழிகாட்டிகளுடனேயே இலங்கை முகவர்கள் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளனர் கடந்த காலங்களில் 60 க்கு உட்பட்ட வழிகாட்டிகளது கூடாரங்கள் மினா எல்லைக்குள்ளேயே காணப்பட்டன இம்முறை புதிதாக அமைக்கப்பட்டுள்ள புகையிரத நிலையங்களை இலக்காகக் கொண்டு இக்கூடாரங்கள் மீள இலக்கமிடப்பட்டுள்ளதால் சில கூடாரங்கள் எல்லையை தாண்டிக் காணப்படுகின்றன இது தொடர்பான அறிவித்தல்களும் வரைப்படங்களும் துல் ஹஜ் பிறை 1 இலேயே எமக்குக் கிடைக்கப்பெற்றன.

இலட்சக் கணக்கான ஹாஜிகள் தங்குவதற்கான கூடாரங்கள் எல்லையைத் தாண்டி  சவூதி அரேபிய அரசாங்கத்தினாலேயே அமைக்கப்பட்டுள்ளன. ஹஜ் கடமையை நிறைவேற்ற வருகின்ற எல்லா ஹாஜிகளையும் மினாஎல்லைகுள் தங்கவைப்பது அசாத்தியமானதாகும் என்பது சவூதி அரேபிய ஹஜ் நிர்வாகத்தினரின் நிலைப்பாடாக உள்ளது. இது தொடர்பாக சவூதி மற்றும் சர்வதேச மார்க்கஅறிஞர்கள் மார்க்க சட்டத்தீர்ப்பு (பத்வா) வழங்கியுள்ளனர்.

இன்நிலைமை இலங்கை ஹாஜிகளுக்கு மாத்திரமல்ல தெற்காசிய முதவப்பீ அமைப்புக்குரிய 50மூ மான கூடாரங்கள் எல்லையைத் தாண்டியே அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர அதிகமான மத்திய கிழக்கு, ஆபிரிக்க, கிழக்காசிய நாடுகளின் கூடாரங்களும் இவ்வாறாக எல்லைக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுவாக திணைக்களம் முகவர் நிலையங்களுக்கு வழிகாட்டல்களை வழங்கும் போது 50 ஆம் இலக்க முகவர்களைத் தாண்டக் கூடாது என்பதை அறிவுறுத்துவதுண்டு கடந்த வருடம் 53, 54, 56 முஅல்லிம்களும் மினா எல்லைக்குள்ளே இருந்ததின் காரனமாக இம்முறை அவ்விலக்க முஅல்லிம்களுடன் ஒப்பந்தம் செய்வதை திணைக்களம் ஆட்சேபிக்கவில்லை.

இவ்வாரான நிலைமையில் சர்வதேச, சவூதி அரேபிய மார்க்க அறிஞர்கள் வழங்கியுள்ள தீர்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டும் சவூதியில் குறிப்பாக ஹரத்தில் பத்வாக்கலை வழங்கும் அறிஞர்களின் ஆலோசனைகளை பெற்றும் இலங்கையிலிருந்து வந்துள்ள அகில இலங்கை ஜம்ய்யதுல் உலமா சபை உலமாக்கலோடும் ஹஜிகளில் வழிகாட்டல் உலமாக்கலோடும் கலந்தாலோசித்து இலங்கையிலிருந்து வந்துள்ள ஹாஜிகளின் ஹஜ் கடமைகளை சிறப்பாக நிரைவேற்ற வழிகாட்டல்களை வழங்குகின்றோம்.

இது தொடர்பாக இலங்கைக்கான ஹஜ் குழு, முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், இலங்கை அரசு என்பனவே காரணம் என சிலர் கடந்த சில நாட்களாக பல விமர்சனங்களை முன்வைத்து  வருகின்றனர் ஹஜ் என்பது வெறுமனே ஒரு சுற்றுப்பிரயாணம் அல்ல இது ஒரு ஆன்மீக வழிபாடு ஆகும் இதனை அரசியல் நோக்கத்திலோ, வியாபார நோக்கத்திலோ பார்ப்பவர்களுக்கு தனது சுயலாபம் கருதி எவ்வாறேனும் விமர்சனம் செய்யலாம் அதாவது ஹஜ் சம்பந்தமான தெளிவான விளக்கமில்லாமல் நடக்கும் இவ்வாறான செயற்பாடுகள் மக்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்படுத்தப்படும் போது அதன் மூலம் தனது சுயலாபங்களை பெற்றுக்கொள்ளமுடியும் என்ற ஒரு குறுகிய மனப்பாங்கு உள்ளவர்களின் செயற்பாடாகவே இதனை கான்கின்றோம் எனவே ஹஜ் கடமை அல்லாஹ்வின் கட்டளையை மனிதன் நிறைவேற்றுகின்ற கடமையே அல்லாமல் இவ்வாறான விசமிகளின் விமர்சனங்களால் அதனை சீர்குழைக்க முடியாது என்பதே எல்லோரினதும் ஏகொபித்த கருத்தாகவும் உள்ளது. 

அத்துடன் இவ்வாறு விமர்சிப்பவர்கள் கடந்த காலங்களில் ஹஜ் கடமைகளை நிறைவேற்றியவர்கள் என்பதும் இவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள நடைமுறை விடயங்களை அனுபவ ரீதியாக தெரிந்தவர்கள் என்ற ரீதியிலும் இவ்விமர்சனங்களின் பின்னனி தூய்மையானது அல்ல என்பது     சகலருக்கும் தெளிவானதாகும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



2 comments:

  1. வருடா,வருடம் ஹஜ்ஜுக்கு அதிகரித்து செல்லும் மக்கள் தொகையை கணக்கிட்டு கூடாரங்கள் அமைக்கும் போது
    நிலப்பரப்பால் அதிக இடம் தேவைப்படும்போது ஒரு சில பத்வாக்களை திருத்தி சில முடிவுகளை மாற்றியமைக்கத்தான்
    வேண்டும்.அங்கு போய் வந்தவர்களுக்கு தெரியும்.இது உல்லாசப்பிரயாணம் அல்ல.சிரமத்துக்கு மேல் சிரமங்களை
    சுமந்து பொறுமையுடன் பொறுத்துக் கொண்டு இறுதி வரை இருப்பதுதான் ஹஜ் கிரியை.இதெல்லாம் கஷ்டமென்றால்
    மஹ்ஷர் மைதானத்தில் வெயிலின் உச்சத்தில் நிற்பதை கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் மிகவும் நல்லது.
    20 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களை ஒரு மாதமளவில் குறிப்பிட்ட எல்லைக்குள் வைத்து பராமரிப்பது நினைத்து பார்க்கவே முடியவில்லை.ஹஜ் என்றால் பொறுமை என்றும் அர்த்தம் கொள்ளலாம்.அல்லாஹ் போதுமானவன்.

    ReplyDelete
  2. இருமுறை மும்முறை என்று ஹஜ்செய்பவர்களால் தான் இப்படியொரு நிலை வருகிறது,இலங்கை போன்ற (முஸ்லிம்கள் சிறுபாண்மையாக வாழும் நாடுகளில் இருந்து தான்)பல முறை ஹஜ் செய்தவர்களை காண முடிகிறது.அத்துடன் ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக உலமாக்கள் மூலம் கூறக்கேட்டிருக்கிறேன் ஹஜ் என்பது அரபாவில் தரிப்பதுதான் அரபாவில் தரிக்கவில்லை என்றால் ஹஜ் இல்லை என்று தொழுகைக்கு சூரத்துல் பாதிஹா போன்று,அதற்காக மற்றைய கிரியைகள் செய்யத்தேவையில்லை என்பதல்ல அவைகளுக்காக சண்டையிடத்தேவையில்லை. இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் அதாவது முகவர் நிலையங்கள்(ஏஜன்டுகள்) 2000 ம்மாம் ஆண்டு மத்திய மாகாணத்தின் ஒரு ஏஜன்ட் சவுதி அரசுக்கு கட்ட வேண்டிய பணத்தை கட்டாது விட்டதினால் அந்த குரூப்பில் நென்றவர்கள் பட்ட கஷ்டத்தை கண்கூடாக காண நேர்ந்தது(அப்போது ஜித்தாவில் கையும் சேர் ஒரு சர்வதேச பாடசாலையில் அதிபராக இருந்தார் நானும் யுசுப் முப்தியின் தம்பியும் தனியாக சென்றோம்) அந்த ஏஜன்ட் இம்முறையும் குரூப் கூட்டிச்சென்றுள்ளார். நான் நினைக்கிறேன் 1995 முதல் ஹஜ் டரவல் செய்பவர் இவர் பற்றி பல முறைப்பாடுகள் இருந்தும் நடவடிக்கை இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.