Header Ads



தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபக தினம் (படங்கள் இணைப்பு)


(அபுதீனா)

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக தினம் இன்று செவ்வாய்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தில் இடம் பெற்றது. 

1995,ஒக்டோபர் மாதம் 23ம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் அயராத முயற்சியின் காரணமாக அன்றய ஜனாதிபதியாகவிருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க அவர்களின் ஆட்சிக்காலத்தில் இந்த பல்கலைக்கழகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

மேற்படி நிகழ்வானது வருடா வருடம் இப்பல்கலைக்கழகத்தில் ஒக்டோபர் மாதம் 23ம் திகதி கொண்டாடப்படுவது வழமை இந்நிகழ்வானது பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் ஸ்தாபக ஞாபகாத்த தினத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன அதன் நினைவாக மரக் கன்றுகளும் நடப்பட்டன   

இதற்கு பிரதம விருந்தினராக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி எஸ்எம்.முஹம்மட் இஸ்மாயில் கலந்து கொண்டதோடு பிரதம பேச்சாளராக மொழித்துறைத் தலைவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லாஹ் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். 








No comments

Powered by Blogger.