புத்தளத்தில் 200 மில்லியன் ரூ. செலவில் விளையாட்டு கட்டிட தொகுதி (படங்கள்)
(அபூ நாதில்)
200 மில்லியன் ரூபாய் செலவில் புத்தளம் நகரில் அமைக்கப்படவுள்ள புத்தளம் மாவட்ட விளையாட்டு கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று மாலை புத்தளம் நகர மத்திய பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள நிலப்பரப்பில் இடம்பெற்றது.
மாகாண மற்றும் மாவட்ட விளையாட்டரங்குகளை நிர்மாணிக்கும் செயற் திட்டத்தின் கீழ் வியைாட்டுத் துறை அமைச்சின் ஏற்பாட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள புத்தளம் மாவட்டத்திற்கான விளையாட்டரங்கு தொகுதி புத்தளத்தில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் வைபவமே இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்றது.
புத்தளம் நகர சபை தலைவர் கே. ஏ. பாயிஸ் மற்றும் வடமேல் மாகாண சுகாதார, தேசிய வைத்திய , விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அசோக வடிகமங்காவ ஆகியோரின் அழைப்பின் பேரில் வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ ஆர் பலல்ல , உள்ளுர் விமான சேவைகள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன, வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி, மின்சாரம், வீடமைப்ப மற்றும் நிர்மாணம், கடற் தொழில் அமைச்சர் அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா உட்பட புத்தளம் மாவட்ட அரசியல் பிரமுகர்கள் இந்த அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டனர்.

Post a Comment