உலக உணவுப் பாதுகாப்பு தர வரிசையில் இலங்கைக்கு 62ம் இடம்
உலக உணவுப் பாதுகாப்பு தர வரிசையில் இலங்கை 62ம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலக உணவுப் பாதுகாப்பு தொடர்பான சுட்டெண் வரிசையில் இலங்கை 62ம் இடத்தை வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
105 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்கா முதலாம் இடத்தையும், கொங்கோ கடைசி இடத்தையும் வகிக்கின்றன. தரம், கிடைக்கக் கூடிய வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான கணிப்பீடு நடத்தப்படுகின்றது. உலக உணவுப் பாதுகாப்பு தர வரிசையில் இந்தியா 66ம் இடத்தை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. gtn
Post a Comment