பிரிட்டனின் இனிமேல் எந்நேரமும் டும்.. டும்..
பிரிட்டனில், பகல் பொழுது மட்டுமல்ல, இரவு நேரத்திலும் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 176 ஆண்டுகளாக, பிரிட்டனில், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சட்டப்படி திருமணம் செய்ய, அரசு அனுமதி அளித்து வந்தது. திருமண சட்டத்தில் திருத்தம் செய்துள்ள பிரிட்டன் அரசு, இனி மக்கள், 24 மணி நேரத்தில், எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள வழிவகை செய்து உள்ளது. இந்த சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. பிரிட்டன் உள்துறை அமைச்சர் மார்க் ஹார்ப்பர், குறிப்பிடுகையில், ""இந்த மாற்றத்தினால் மக்கள் இனி தங்கள் வாழ்வின் முக்கியமான, திருமண நாளை திட்டமிட அதிக சுதந்திரம் உள்ளது,'' என்றார்.

உலக சுதந்திரத்தை பேசுபவர்களிடம் சாதாரண கலியாணம் கூட நம் விருப்புக்கு செய்வதற்கு 21 நுற்றாண்டில் சுதந்திரம் கிடைத்திருக்கிறது.வாழ்க கருத்து சுதந்திரம் உடைய நாடுகள்
ReplyDelete