அதுறுகிரிய வாகன விபத்தில் 4 பேர் பலி
கொழும்பின் புறநகர் அதுறுகிரிய பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்பகுதி அதிவேக பாதையின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வாகனமே தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது
இவ் விபத்தின் போது அதில் பயணித்த ஒரு சீன நாட்டு பணியாளர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மற்றும் வாகன சாரதி ஆகியோர் மரணமாகியுள்ளனர்.

Post a Comment