Header Ads



இலங்கையில் கிரிக்கெட் நுழைவுச்சீட்டு திருடிய பிரித்தானியர் வசமாக மாட்டினார்


VI

இலங்கையில் இடம்பெற்றுவரும் உலகக் கிண்ண இருபது – 20 கிரிக்கெட் போட்டித் தொடரின் நுழைவுச் சீட்டுக்களை திருடிய குற்றச்சாட்டில் பிரித்தானிய பிரஜை ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

கறுவாத்தோட்டப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஐ.சி.சி. யின் உலகக் கிண்ண இருபது  20 கிரிக்கெட் தொடரின் நுழைவுச் சீட்டு விற்பனை நிலையமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. நுழைவுச் சீட்டு கொள்வனவு செய்பவரைப் போல குறித்த நிலையத்துக்கு வந்த 54 வயதுடைய பிரித்தானிய பிரஜை ஒருவரினாலேயே குறித்த நுழைவுச் சீட்டுக்கள் திருடப்பட்டுள்ளன. 

சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டிக்கான நுழைவுச்சீட்டுக்களே குறித்த சந்தேக நபரால் திருடப்பட்டுள்ளன. தலா 25 நுழைவுச் சீட்டுக்களைக் கொண்ட புத்தகங்களைத் திருடிய குறித்த சந்தேக நபர் தொட ர்பில் அலுவலகத்தில் கடமையில் இருந்த அதிகாரிகள் கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்ததையடுத்தே அவர் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப் பட்ட சந்தேக நபரான பிரித்தானிய பிரஜையிடம் கறுவாத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No comments

Powered by Blogger.