அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டி 2012
அஷ்ரப் ஏ சமத்
2012 அக்டோபர் 9 - 13ம் ம் திகதி வரை அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டி ஹம்பாந்தோட்டையில் உள்ள வெலியத்த ராஜபக்ச மைதாணத்தில் நடைபெறுகின்றது.
9 மாகாணங்களில் இருந்தும் 5128 மாணவர்கள் 538 விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுகின்றனர். 'தாருன்ய கெட்ட' நாளைய இளைஞர்களுக்கான அமைப்பு இவ் நிகழ்வுகளுக்கு முழுமையான அனுசரனையும் வழங்குகின்றது. சி.எஸ்.எம் விளையாட்டுத் தொலைக்காட்சி நிலையம் சகல நிகழ்வுகளையும் இலவசமாக நேரடி ஒலிபரப்புச் செய்கின்றது.
இப் பாடசாலை விளையாட்டுப் போட்டியின்போது தமிழ் முஸ்லீம் சிங்கள கிருஸ்த்தவ மாணவ மாணவிகள் தெற்கில் ஒன்று கூடுகின்றனர். இதனால் இனங்களுக்கிடையே ஜக்கியம் நட்புறவுகளுக்கும் வழிவகுக்கின்றது. மேற்படி விடயம் சம்பந்தமாக இன்று(3) கல்வியமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்தும் தகவல் தருகையில்,,
வடக்கில் 558 மாணவர்களும் கிழக்கில் இருந்து 540 மாணவர்களும் கலந்து கொள்கின்றனர் 9 மாகாணத்தில் இருந்தும் 2713 ஆண்களும் 2415 பெண் மாணவர்களுமாக 5128 மாணவர்கள் இப் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். இவர்கள் 5 நாட்கள் தங்கி நின்று இப் போட்டிகளில் பங்குபற்றுவார்கள். இவர்களுக்கான போக்குவரத்து மற்றும் தங்குமிடம், உணவு போன்ற சகல செலவுகளை தாருண்ய கெட்ட பொறுப்பெடுத்துள்ளது.
இப் போட்டியின் ஆரம்ப விழா 2012 அக்டோபர் 09ம் திகதி காலை 08.30 மணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சரும் மகிந்தானந்த அளுக்கமகே, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஸஜபக்சவும் கலந்து கொண்டு விளையாட்டுப்போட்டிகளை ஆரம்பித்து வைப்பார்கள்.
இறுதி நாள் நிகழ்வு 13ம் தகதி பி.பகல் 03.00 மணிக்கு நடைபெறும் இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஐனதிபதி மஹிந்த ராஜபக்சவும் கல்வியமைச்சரும் கலந்து கொள்வார்கள்
13வயது தொடக்கம் 21வயது வரையிலான வயதினைக் கொண்ட மாணவர்கள் கலந்து கொள்வார்கள். இலங்கை மெய்வல்லுனர் சங்க சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளன விதிமுறைகளுக்கு அமையவும் கல்வியமைச்சின் நிர்வாக நீதி முறைகளுக்கு அமையவும் போட்டிகள் நடைபெறும்.
வெலிபோல், குத்துச்சண்டை யூடோ, காற்பந்து, எல்லை மேசைபந்து. பேஸ்போல் பெட்பிண்டன் கொக்கி, கரம்,கபடி கூடைப்பந்து,கராட்டி போன்ற விளையாட்டுப்போட்டிகளும் பாடசாலை கழகங்கள் வயதடிப்படையிலும் ஆண் பெண் போட்டிகளாக நடைபெறும். மாகாணமட்டம் தேசிய மட்டம் என பல்வேறு மட்டத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.
இம் மாணவர்களது போட்டிகளில் மத்தியஸ்தம் வகிப்பதற்கும் 300 விளையாட்டு ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். முன்று மொழிகளிலும் அறிவித்தல்கள் மற்றும் வெளியீடுகள் வழங்கப்படுகின்றது. தங்குமிட வசதிகள் மற்றும் ஹம்பாந்தோட்டைப் பகுதிகளில்; மணாவர்கள் சுற்றுப்;பிரயணம் செய்வதற்கும் கொழும்பில் இருந்து விசேட ரயில் சேவை பஸ் சேவையும் ஈடுபடுத்தப்பட உள்ளது. என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

Post a Comment