Header Ads



பௌத்த பிக்குவுக்கு 20 வருட கடூழிய சிறை


AD

பெண்ணொருவரை ஏமாற்றி அழைத்துச் சென்று அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் றுவான்வெல்ல ஏ.சோபித்த தேரர் உள்ளிட்ட மூவருக்கு 20 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. றுவான்வெல்ல சோபித்த தேரர் என அழைக்கப்பட்ட சுனில் சாந்த என்பவர் இன்று செவ்வாய்கிழமை கேகாலை மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின் சிறை வைக்கப்பட்டுள்ளார். 

மந்திர தந்திர வேலைகளின் பெயரால் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த இவர், கேகாலை மாவட்டத்தில் றுவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர். மந்திர தந்திர வேலைகளில் கை தேர்ந்தவர் என்று மிகுந்த பிரபலம் அடைந்து இருந்தார். 

பல மில்லியன் ரூபா வரை பெறுமதியான சொத்துக்கள் சேர்த்து இருக்கின்றாராம். இவரிடம் மந்திர தந்திர வேலைகளுக்கு வருபவர்களில் கணிசமான தொகையினர் யுவதிகள். இவர் மந்திர தந்திர வேலைகளுக்கான தயார்ப்படுத்தல் என்று சொல்லி பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்கின்றமை வழக்கமாம். 

இந்நிலையில் வானொலி ஒன்றில் பணிபுரியும் பெண் ஊடகவியலாளர் ஒருவர் இவரை மந்திர வேலைக்கு என அணுகி இருக்கின்றார். அப்பெண்ணுக்கு சோபித தேரர் பல தடவைகள் தொலைபேசி அழைப்புக்கள் மேற்கொண்டு பெண்ணிடம் அந்தரங்கமான கேள்விகளை தொலைபேசியில் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உல்லாசமாக இருக்க வருமாறு தேரர் அப்பெண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இவருடைய உரையாடல்களை பெண் ஊடகவியலாளரால் ஒலிப்பதிவு செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுறது. 

குறித்த ஒலிப்பதிவு வானொலியில் ஒலிபரப்பட்ட பின்னர் பொது மக்கள் தேரரை ஒரு போலியானவர் என அடையாளம் கண்டுகொண்டனர். பின்னர் தேரரின் மாடி வீட்டை முற்றுகை இட்டு வீட்டில் இருந்து ஆயுதங்கள், மதுபான போத்தல்கள் போன்றவற்றை கண்டுபிடித்தனர். அதன் பின்னர் குறித்த போலி தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.