Header Ads



சவூதி அரேபிய மன்னரின் ஏற்பாட்டில் 1400 பேருக்கு ஹஜ் செய்வதற்கு ஏற்பாடு


உலகளவில் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களில் இவ்வாண்டு 1400 பேருக்கு  சவூதி மன்னர் அப்துல்லாஹ் புரவலாக இருந்து கவுரவிக்கின்றார்.

இந்தோனேசியா, இந்தியா, பங்களாதேஷ், கம்போடியா, பாகிஸ்தான், துருக்கி, தாய்லந்து ஃபிலிப்பைன்ஸ் கஜகஸ்தான் ஸ்ரீலங்கா, தஜிகிஸ்தான், நேபாள், ஆஃப்கனிஸ்தான், ரஷ்யா, மலேசியா, சீனா, ஹாங்க் காங், மங்கோலியா, சிங்கப்பூர், மியான்மர், ஜப்பான், லாவோஸ், பூட்டான், நியூகினியா, தய்வான், தென்கொரியா, மாலத்தீவுகள், அஜர்பெய்ஜான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், தெற்கு சூடான் உள்பட பல ஆப்ரிக்க தேசங்களைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.  

இதுவரை சவூதி மன்னர் தம் புரவலர்தன்மையில் சுமார் 20,000 பேர் ஹஜ் செய்யும் வாய்ப்பு பெற்றவர்கள் என்று சவூதி அரேபிய  செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது.  கடந்த ஆண்டு புதியதாக உதயமான தெற்கு சூடானில் இருந்து 100 பேர் மன்னரின் விசேட அழைப்பில் ஹஜ் பயணம் நிறைவேற்றினர். inneram

No comments

Powered by Blogger.