பறகஹதெனியாவில் தேசிய இஸ்லாமிய மாநாடு - வெளிநாட்டு அறிஞர்களும் பங்கேற்பு
இக்பால் அலி
ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் ஏற்பாட்டில் நடத்தப்படும் தேசிய இஸ்லாமிய மாநாடு இம்மாதம் செப்டம்பர் 29, 30 ஆகிய இரு தினங்களில் பறகஹதெனியாவில் தாரூத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா அரபுக் கல்லூரி மைதானத்தில் பாரியளவில் ஏற்பாடு செய்யபட்டுள்ளதாக பொதுத் தலைவர் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி தெரிவித்துள்ளார்.
இம் மாநாட்டில் எமது நாட்டைச் சேர்ந்த அறிஞர்களும் இந்தியா, சவூதி அரேபியா, குவைட் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும் பங்கேற்கவுள்ளார்கள்.
இஸ்லாம் வாழ்வின் அனைத்துத் துறைகளும் வழிகாட்டுகின்ற மார்க்கமாகும். அல்குர்ஆனினதும் அஸ்ஸுன்னாவினதும் வழியிலமைந்த இவ்வாழ்க்கை நெறியினை, ரசூல் (ஸல்) அவர்கள் மனித சமதாயத்துக்கு முன்வைத்து அதன் அடிப்படையிலேயே வாழ்ந்தும் காட்டினார்கள்.
ரசூல் (ஸல்) அவர்களது இவ்வழிகாட்டுதல்களை ஸஹாபாக்களும் பின்பற்றி மனித சமுதாயத்திற்கு ஒரு முன் மாதரிமிக்க வாழ்க்கை நெறி இஸ்லாம்தான் என்பதைப் பதிவு செய்துள்ளார்கள்.
இந்த அற்புதமான மனித வாழ்வின் நிம்மதிக்கு வழிகாட்டுகின்ற, ஈருலக பாக்கியமும் நிறைந்த, சுவன வாழ்க்கைக்கு தம்மை தயார் படுத்துகின்ற வாழ்க்கை நெறி இஸ்லாம் தான் என்பதை எடுத்தியம்பி, அல் குர்ஆனினதும் அஸ்ஸுன்னாவினதும் அடிப்படையில் ஓரணியில் ஒன்று திரள்தற்கான வழிகாட்டும் களமாக, தேசிய இஸ்லாமிய மாநாட்டை ' ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா' ஏற்பாடு செய்துள்ளது.
மார்க்க அறிஞர்கள் பின்வரும் தலைப்புக்களில் சொற்பொழிவாற்றவுள்ளனர். அஹ்லுஸ் சுன்னத்வல் ஜமாஅத் என்போர் யார் ?, அண்ணல் நபி (ஸல்) ஓர் அழகிய முன்மாதரி, அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவை அணுகும் முறை, ஒழுக்க விழுமியங்களை எதிர்நோக்கிய பயணம், மாற்று மாதத்தவர்களுடனான சமூக உறவுகள், தூய இஸ்லாமிய குடும்ப வாழ்வு - அடிப்படைகளும் வழிகாட்டல்களும், நபித்தோழர்களும் நமது நிலைப்பாடும், சிறுவர், பெண்கள் துஸ்பிரயோகம் - களைவதற்கான வழிகள், முஸ்லிமின் வாழ்வில் மறுமை நம்பிக்கையின் தாக்கங்கள், இஸ்லாமியக் கோட்பாடும் ஷPயாக்களின் நிலைப்பாடும், முஸ்லிம் உலகு எதிர் நோக்கம் சவால்கள். அல்குர்ஆன் சுன்னாவின் பார்வையில் சூனியம் ஆகிய தலைப்புக்கள் உரைகள் இடம்பெறவுள்ளன.
இந்தச் தேசிய மாநாட்டை மிகுந்த சிறப்புடன் நடத்துவதற்காக முப்பதிற்கும் மேல் மேற்பட்ட உலமாக்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளன. அவர்கள் இம்மாநாடு குறித்த நடவடிக்கையில் மிக ஆர்வத்துடன் உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் நாட்டின் பல பாகங்களுக்குச் சென்று மாநாடு குறித்த விளம்பரத்தை மேற் கொண்டு வருகின்றனர். அதேவேளை பறகஹதெனிய கிராம மக்கள் உட்பட அங்குள்ள இளைஞர் அணியினர் இம்மாநாடு வெற்றிபெற வேண்டும் என அல்லும் பகலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்த மாநாட்டில் கலந்து பயன்பெறுவதோடு, குடும்ப அங்கத்தவர்கள், நாட்டின் பாகங்களிலும் வாழும் முஸ்லிம் கிராமங்களைச் சேர்ந்த சகோதரர்கள், இளைஞர்கள், மாணவர்கள், ஜமாஅத் அங்கத்தவர்கள், ஒன்று திரண்டு வரவுள்ளார்கள். இஸ்லாம் எங்கள் வழி அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவுமே எமது வழிகாட்டிகள் இதனைப் பின்பற்றுவதன் ஊடாகவே, நாம் எதிர்பார்க்கின்ற சுவன வாழ்க்கைக்குத் தகுதியுடையவர்களாக மாறலாம் என்ற திட்ட உறுதியுடன் செயல்பட இம் மாநாடு வழி வகுக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment