Header Ads



மன்னர் அப்துல்லாஹ்வும் வாய் திறந்தார்..!

 
முஹம்மது நபியை  அவமதிக்கும்  திரைப்படத்தை அகற்றாத பட்சத்தில் யூடியுப் இணையத் தளம் முழுமையாக முடக்கப்படும் என சவூதி அரேபியா எச்சரித்துள்ளது. இந்த திரைப்படத்தை அகற்றுமாறு சவூதி மன்னர் அப்துல்லா கூகிள் நிறுவனத்திடம் கோரியுள்ளார். கூகிள் அதனை செய்ய தவறினால் யூடியுப் இணையத்தளம் சவூதியில் முழுமையாக முடக்கப்படும் என சவூதியின் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
 
ரஷ்ய அரசும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தை அகற்றுமாறு யூடியுபிடம் கோரியுள்ளது. இந்த திரைப்படம் தீவிரவாத போக்குடையதா என்பது குறித்து ரஷ்யா நீதிமன்றம் ஆராய்ந்து வருகிறது. அது நிரூபிக்கப்படும் பட்சத்தில் ரஷ்யாவில் யூடியுப் இணையதளம் முழுமையாக முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே யூடியுப் இணையத்தளம் சூடான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் முடக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன், யெமன் ஆகிய நாடுகளில் இந்த திரைப்படம் இணைக்கப்பட்டுள்ள அனைத்து இணையத்தளங்களையும் முடக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
மலேஷியா, இந்தோனேஷியா, லிபியா, எகிப்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இந்த திரைப்படத்தை யூடியுப் இணையத்தளமே முடக்கியுள்ளது. எனினும் சர்ச்சைக்குரிய திரைப்படம் பதிவேற்றப்பட்டிருப்பது நிறுவன கொள்கைக்கு இணங்கியதாக உள்ளதாகக் கூறியே யூடியுப் அதனை அகற்ற மறுத்து வருகிறது.
 
 

6 comments:

  1. mashaALLAH , appo. inda S.lanka la mattum aza ean mudakka mudiyazu? maarkka arijarhale neengal enna seyzu kondu irukkureerhal..

    ReplyDelete
  2. (மன்னருக்கு காலம் கடந்தேனும் ஞானம் பிறந்ததில் மிக்க மகிழ்ச்சி- அல்ஹம்து லில்லாஹ்...) உலகின் மூலை முடுக்கெல்லாம் இரண்டு வாரங்களாக சாதாரண மனிதன் முதல் சர்வதேச தலைவர்கள் வரை அறிக்கை விட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தியும், இஸ்லாத்தின் மீதான பற்றையும் நபிகளார் மீதான பாசத்தையும் வெளிப்படுத்தும் போது... மிகப்பெரும் இஸ்லாமிய நாடொன்றின் மன்னரும் இரண்டு புனிதத்தலங்களின் சேவகருமான மன்னர் அப்துல்லாஹ் திடீரென்று விழித்துக்கொண்டது எம்மைப்போன்ற அஜ்னபிகளுக்கு சற்று ஆறுதல் தான். இனி மத்திய கிழக்கின் மற்றைய தலைவர்கள் எல்லாம் நாளைமுதல் அறிக்கை விடுவார்கள் போலும்...!!! பாவம் இந்த இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் இஸ்லாத்திட்காகவே கஷ்டப்பட்டு கலைத்து விட்டார்கள். அதற்குள் அமெரிக்காவுக்கு எதிராகவும் பேசவேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு !!!

    ReplyDelete
  3. அமெரிக்கா எழுதிக்கொடுத்த அறிக்கையின் படி பத்து நாட்களுக்கு சிங்கம் சிங்கிளாக வாய் திறந்து இருக்கிறது

    ReplyDelete
  4. It is not banned in Bahrain, now you can see full lenth video.

    ReplyDelete
  5. சரி விட்ருங்கப்பா, மன்னருக்கு இப்பவாவது ஞானம் பொறந்திருக்கு. நல்லது நடக்குமெண்டு எதிர்பார்ப்பம். இது போன்ற பெரிய இஸ்லாமிய நாடுகளில் ஆரம்பித்தால் தான் தாக்கம் தெளிவாகத் தெரியும். எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன், "டென்மார்க்" விடயத்தில் அரபுகள் எல்லோரும் சேர்ந்து அவர்களின் தயாரிப்புக்களைப் புறக்கணித்ததன் விளைவு; அவர்களுக்கு வந்த கோடிக்கணக்கான நஷ்டத்தால் அந்தப் பத்திரிகைக்கெதிராக நடவடிக்கை எடுத்தார்கள். நாமும் முயற்சிப்போம் - இதே போல் பெரிய மாற்றங்கை எதிர் பார்த்து.

    ReplyDelete
  6. திரைப்படத்தைத் தயாரித்த அமெரிக்காவுக்கு எதிராக ஒரு வார்த்தையேனும் கூறவில்லையே மன்னர். இவரல்லவோ இரு புனிதஸ்தலங்களின் பாதுகாவலர். இப்படி இவர் வாய்திறந்தால் என்ன? மூடிக் கொண்டிருந்தால்தான் என்ன? உலகம் விழித்துக் கொண்டதைக் கண்டு அச்சம் கொண்ட பீதியின் பிரதிபலிப்பே மன்னரின் இந்த கூற்று.

    ReplyDelete

Powered by Blogger.