Header Ads



புதிய சட்டமா அதிபரை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் வரவேற்றார் (படங்கள் இணைப்பு)

அண்மையில் இலங்கையின் புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி பாலித பெர்ணான்டோவுக்கு இலங்கைச் சட்ட மன்றம் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்வு வியாழக்கிழமை (20) மாலை கொழும்பு சினமன் கிராண்ட்  ஹோட்டலில் நடைபெற்ற பொழுது நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அங்கு விஷேட உரையாற்றினார். 

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கைச் சட்டமன்ற தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ, முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி. சில்வா, நீதியமைச்சின் செயலாளர் திருமதி கமலினி டி சில்வா ஆகியோர் உட்பட இலங்கையின் மற்றும் அரச மற்றும் தனியார் முன்னணி சட்டத்தரணிகள் அநேகர் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
 
பிரபல சட்டத்தரணி திரு.அருள்பிரகாசம் நீதியமைச்சர் ஹக்கீமை ஏனைய அதிதிகளையும் வரவேற்றார்.
 





 
 

No comments

Powered by Blogger.