Header Ads



அம்பாறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் சேவை முடக்கம்

அஸ்ரப் ஏ. சமத்

அம்பாறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரேமலால் ரணகல தேர்தல் அசம்பாவிதங்கள் தொடர்பாக  அக்கரைப்பற்றில் ஒரு தலைப்பட்சமாக செயற்பட்டதையிட்டு பொலிஸ்மா அதிபர் திரு. ஐ இலங்கக்கோன் தேர்தல் நடைபெற்று முடியும் வரையில் அவரது சேவையை முடக்கிவிடப்பட்டுள்ளது.

இப் பிரதேசங்களின் தேர்தலுக்கு பொறுப்பாக  விசேட அதிகாரியாக பொலிஸ் அத்தியட்சகர்  பாலித்த விஜேரத்தின நியமிக்கப்பட்டுள்ளனார்.

மேலும் இப் பிரதேசங்களின் தேர்தல் கடமைகளுக்கு200 பொலிசாரும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன் அலி சிரேஸ்ட் சட்டத்த்ரணி நிசமர் காரியப்பர் ஹணிபா மௌலவி அம்பாறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகலவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கொண்றையும் தாக்கல் செய்துள்ளனர்.

கிழக்குத் தேர்தல் சம்பந்தமாக அக்கரைப்பற்று கல்முனை ஏறாவூர் தெஹியத்தக்கண்டிய போன்ற பிரதேசங்களின் தேர்தலுக்கு பொறுப்பாக பொலிஸ் அத்தியச்சகர்  பாலித்த விஜேரத்தின நியமிக்கப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்றில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நடைபெறும் தேர்தல் வன்முறைகள் பற்றி தேர்தல் ஆணையாளர் 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்ட்டு அக்குழுவின் அறிக்கை தேர்தல் ஆணையாளர் மஹிந்த   தேசப்பிரியவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து பொலிஸ் மா அதிபர் மேற்படி நியமணத்தை மேற்கொண்டுள்ளார்.

3 comments:


  1. "எனது நிர்வாகத்தின் கீழுள்ள பகுதிகளில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் காக்கிச் சட்டையைக் கழற்றி விட்டு பதவியையும் இராஜினாமா செய்வேன். உருவ வழிபாடற்ற உள்ளத்தையும் சிந்தயையும் ஒருமுகப்படுத்தி ஏக இறைவனை வணங்குபவர்கள் முஸ்லிம்கள் மாத்திரமே.

    முஸ்லிம்களின் வேத நூலான புனித அல்குர்ஆனை நான் படித்து வருகின்றேன். முஸ்லிம்களின் சமய விடயங்களை தினமும் விளங்கி வருவதுடன் அவர்களின் சமயத் தலங்களையும் தரிசித்து வருகின்றேன். புனித மக்கா நகர் செல்லவும் பேரவா கொண்டுள்ளேன். மரணித்தவுடன் எவ்வித தாமதமுமின்றி ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் முஸ்லிம்களின் பணியை ஏனைய சமயத்தவர்கள் இன்று வரவேற்றுப் பேசுகின்றனர்.


    இன்று தம்புள்ளை போன்ற பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை அகற்றுவதற்கு எனது இனத்தைச் சேர்ந்த சில தீய சக்திகள் முயற்சிப்பதையிட்டு ஒரு பௌத்தன் என்ற வகையில் நான்வெட்கித் தலை குனிய வேண்டியுள்ளது."

    இவ்வாறு கூறியது யார் தெரியுமா? சேவை முடக்கத்திற்கு உள்ளாகியிருக்கும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகல ஆகும்.

    இதே செய்தி யாழ்.முஸ்லிமின் MOST POPULAR NEWS இல் இரண்டாவது செய்தியாக இடம்பெற்றுள்ளது.


    http://www.jaffnamuslim.com/2012/05/blog-post_2434.html

    ReplyDelete
  2. If some one works against Sri Lanka Muslim Congress it doesn't mean he is against Muslim Community. Then what do we mean if some one works against All Ceylon Muslim Congress? Because both party has Muslim in their names.
    What he said was right and a good thing. At least has a self confident that he has guilty feeling as a Buddhist for Dambulla incident.
    My opinion is we have to look at the above news as the SSP of the police who was supported to one party or showed favoritism to one party has been suspended. That's it.

    ReplyDelete
  3. சகோ La Voix :அது அப்போ ! இது இப்போ ! இதில் ஆச்சரியப் பட என்ன இருக்கிறது? இவர் நாளைக்கே இனவாதம் பேசி பெரும்பான்மையினரைத் தூண்டி எமக்கெதிராக அராஜகங்களில் ஈடுபட்டாலும் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஏனெனில் இவர்களுக்கு நியமனங்கள் வழங்குவது, பதவி உயர்வுகள் வழங்குவது, சேவை முடக்கங்கள் செய்வது எல்லாமே மேலிடத்து ஆணை தானே இதில் என்ன ஆச்சரியம்.? இதில் என்ன புதினம் ??

    ReplyDelete

Powered by Blogger.