Header Ads



''பள்ளிவாசலை வைத்து அரசியல் செய்வது பொருத்தமற்ற செயல்''



இர்ஷாத் றஹ்மத்துல்லா

கொழும்பு கல்விஹார பாதையில் அமைந்துள்ள மஸ்ஜித் பாபக்கர் பள்ளிவாசலை வைத்து அரசியல் செய்வது பொருத்தமற்ற செயல் என தெரிவித்துள்ள பள்ளிபரிபாலன சபையினர், தற்போதும் இப்பள்ளி வாசலில் எவ்வித தங்கு தடைகளுமின்ற மதக் கடமைகளை நிறைவேற்ற முடிந்துள்ளதாக  தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்பள்ளிவாசலில் மதக் கடமைகளை மேற்கொள்ளக் கூடாது என்று தெரிவித்து சில பௌத்த மத குருமார்கள் தடையினை ஏற்படுத்த வந்த போது,பள்ளி பரிபாலன சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.கியாஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சில பெரும்பான்மை சமூக பிரதி நிதிகள் பள்ளிவாசல் செயற்பாடுகளை முடக்குவதற்கு முனைவதாகவும் உடனடியாக வருகைத் தந்து,உரிய நடவடிக்கையெடுக்குமாறும் விடுத்த வேண்டுகோளையடுத்து அங்கு விஜயம் செய்த அமைச்சர்களான றிசாத் பதியுதீன்,ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரும்,அங்கு பிரசன்னமாகியிருந்த மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,டாக்டர் மரீனா,முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன்,தெஹிவளை மாநகர சபை உறுப்பினர் நபுஸான் ஹஸன் ஆகியோரும் பள்ளிவாசல் பரிபாலன சபையினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்த போது, கல்விஹாரயின் பௌத்த குரு ஒருவர் பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுளைய முற்பட்ட போது,அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் ,அந்த பௌத்த மத குருவுக்கு பள்ளிவாசலின் செயற்பாடு குறித்து விளக்கப்படுத்தியதுடன்,இன உறவுக்கு குந்தகம் விளைவிப்பதை அனுமதிக்க முடியாது என்று தெளிவாக கூறினார்.அதனையடுத்து அமைச்சர் றிசாத் பதியுதீன்,மற்றும் டாக்டர் மரீனா ஆகியோர் கல்விஹாரைக்கு சென்று அங்கிருந்த பிரதம பௌத்த மத குருவை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடலினை மேற்கொண்டார்.

அதனையடுத்து மீண்டும் வழமைப் போன்று மதக் கடமைகளை இங்கு நிறைவேற்றுமாறும்,பள்ளிவாசல்களை தாக்குவதற்கோ,அகற்றுவதற்கோ எவருக்கும் அனுமதியளிக்க முடியாது என்பதை தெளிவாக அமைச்ச்ர் றிசாத்பதியுதீன் எடுத்துரத்ததுடன்.இது குறித்து உடனடியாக தொலைபேசியில் பாதுகாப்பு செயலர்.மற்றும் திணைக்கள அதிகாரிகளுடன் பேசி பள்ளிவாசலின் செயற்பாட்டை உறுதிப்படுத்தினார்.

இந்த மஸ்ஜித் பாபக்கர் பள்ளிவாசலை இங்கு நிருவுவதற்கு 16 வருடங்களுக்கு முன்னர் சவூதி ஆரேபியாவின் ஒரு தனவந்தர் இந்தக் காணியினை பெற்றுத் தந்திருந்தார்.பின்னர் அதை ஒரு தற்காலிக மத வழிபாட்டு தளமாக எமது பரிபாலன சபை பயன்படுத்தி வந்தது என்று பள்ளி பரிபாலன சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.கியாஸ் தெரிவித்தார்.

இந்த நிலையில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் எமது நிர்வாகம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பள்ளிவாசலில் இவ்வாறு ஒரு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அமைச்சர்களான றிசாத் பதியுதீன், ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் வருகைத் தந்திருப்பதாகவும்,தங்களின் வருகையினையும் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தோம். ஆனால் அவர் வருவதாக கூறியும், இன்று வரையும் அப்பள்ளி நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளவுமில்லை, வருகைத் தரவுமில்லை.

இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு சில சக்திகளால் இழைக்கப்படும் அநீதிகளை தட்டிக் கேட்டு அதற்கு நியாயம் பெற்றுத் தர வேண்டியது முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கடமையென்பதை எவரும் மறந்து செயற்பட முடியாது.இந்த நிலையில் எம்மால் விடுக்கப்பட்ட கோறிக்கையினையேற்று உடன் வருகைத் தந்து உதவி செய்த அமைச்சர்களான றிசாத் பதியுதீன்,எ.எச்.எம்.பௌசி,மற்றும் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அமீன் ஹாஜியார்,தெஹிவளை மாநகர சபை உறுப்பினர் நபுஸான் ஹஸன் ,டாக்டர் மரீனா ஆகியோருக்கு எமது பள்ளி பரிபாலன சபையினர்கள் சார்பில் முஹம்மத் றபீக்,ஏ.எல.எம்.எம்.சபீர்,முஹம்மத் ஹில்மி ஆகியோரும் தமது நன்றிகளை தெரிவிப்பதாக பள்ளிபரிபாலன சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.கியாஸ் தெரிவித்தார்.
 

1 comment:

  1. Bad news for Hakeem who uses mosques for his dirty politics. I feel very sorry for him.

    ReplyDelete

Powered by Blogger.