கல்பிட்டியில் வெடிபொருள் வெடித்து ஒருவர் மரணம், 7 பேர் காயம்
புத்தளம் மாவட்டத்தில் கல்பிட்டி கண்டல்குழி கடற்கரை பிரதேசத்தில் கிடந்த வெடிப் பொருளினை வைத்து விளையாடிக் கொண்டிருந்த வேளை அது வெடித்ததில் ஒருவர் பலியானதுடன்,7 பேர் காயங்களுக்குள்ளானதாக கல்பிட்டி வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இன்று மாலை 3 மணிக்கு இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.கண்டக்குளி விமானப்படையினரின் பயிற்சி நிலையத்தின் அருகிலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
விமானப் படையினரின் பயிற்சியின் போது கைவிடப்பட்ட நிலையில் மண்ணில் புதைந்து காணப்பட்ட இந்த வெடிபொருளே வெடித்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக கல்பிட்டி பொலீஸார் தெரிவிக்கின்றனர்.
காயப்பட்டவர்களில் கடுமையான காயங்களுக்குள்ளான 4 பேர் கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் புத்தளம் வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.

Post a Comment