முஸ்லிம் சேவை குறித்து நேயர்கள் கவலை வெளியீடு..!
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் நேற்றைய (வியாழக்கிழமை) ஒலிபரப்பு முற்றிலும் அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தமை குறித்து முஸ்லிம் சமூகம் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
இரவு 8 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை நடைபெறும் முஸ்லிம் வேவை நிகழ்ச்சியில் அரசியல் விளம்பரங்கள் மாற்று மத சகோதரர்களின் அரசியல் சார்பு விளக்கங்கள் ஒலிபரப்பப்பட்டதாகவும் இதுவோர் திட்டமிட்ட முறைகேடு எனவும் முஸ்லிம் நேயர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் சேவையில் முஸ்லிம் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பபடும் வேளைகளில் இவ்வாறான அரசியல் சார்பு நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதை தவிர்க்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மை சமூக சமய நிகழ்வுகள் ஒலிபரப்பப்படும்போது அரசியல் விளம்பரங்களோ அல்லது இஸ்லாமிய மதப்பிரமுகர்களை அழைத்து அரசுக்கு சார்பாக விளக்கம் கொடுக்குமாறு வலியுறுத்தப்பட்டதில்லையெனவும், முஸ்லிம் சேவை நிகழ்ச்சியின் போதே இவ்வாறான நிகழ்வு நடைபெறுள்ளதெனவும் நேயர்கள் சார்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இ.ஒ.கூ பொது மக்களின் சொத்து. அது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். அதுவும் முஸ்லிம் சேவை இவ்வாறு அரசியலுக்காகத் துஷ்பிரயோகம் செய்யப்படுவது நிச்சயம் கண்டிக்கப்படவேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் முஸ்லிம்கள் அரசாங்கம் மீது நம்பிக்கை இழந்து விடுவர். இவ்விடயத்தில் இ.ஒ.கூ. தலைவர் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கிறோம்.
ReplyDeleteMahinda and co think that Muslims will vote to them after listening their commentary in the Muslim service
ReplyDeleteமுஸ்லிம் சேவையில் ஒலிப்பரப்பாகும் விளம்பரங்களுக்கும், அனுசரணை நிகழ்ச்சிகளுக்குமான கட்டணங்கள் அண்மையில் இருமடங்காக அதிகரிக்கப்பட்டமை நாம் அறிந்ததுதானே.
ReplyDeleteதம்பி இக்றாம் இனிமேல்தான் நம்பிக்கையை இழக்க வேண்டி வரும் என்பதில்லை. ஏற்கெனவே இழந்தாச்சு.
கொமிஸனுக்காக அரசுடன் தொத்திக்கொண்டிருப்பவர்களுக்கும், அவர்களுடன் ஒட்டிக் கொண்டிருப்பவகளுக்கும் வேண்டுமானால் இன்னும் காலம் இருக்கலாம். ஆனால் சூடு சொரணை உள்ளவர்கள் நம்பிக்கை இழந்து வெகு நாளாகிவிட்டது.
அனைத்துப் பள்ளிவாயல்கள் தீமானம் என்று பள்ளிவாயல் ஒலி பெருக்கியில் சொன்னால் மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புபவர்களைப் போல முஸ்லிம் சேவையில் சொன்னால் முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள் என்று எண்ணியிருப்பார்கள் போலும்.
சிந்திக்கும் மக்களுக்கு இறைவன் சான்றுகளை தாராளமாகவே வைத்துள்ளான். அது மறுமை விடயமாயினும், உலக விடயமாயினும் சரியே... repeating சிந்திக்கும் மக்கள். சிந்திப்பதற்கு படித்தவராகக் கூட இருக்க வேண்டியதில்லை.- just சிந்திக்க வேண்டும். அவ்வளவு தான். நாம் பாமரனாகக் கூட இருக்கலாம்.! சிந்திக்காதவனை இஸ்லாம் எப்பொழுதும் ஆதரித்ததில்லை.
ReplyDelete