Header Ads



'அரபு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதீர்கள்' - முர்ஸி எச்சரிக்கை

 
சிரியாவில் மக்கள் எழுச்சிப் போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ள சூழலில் அதனைப் புரிந்துகொண்டு தனது பதவியை ராஜினாமாச் செய்யுமாறு சர்வாதிகாரி பஸாருல் ஆஸாத்தை எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி வலியுறுத்தியுள்ளார்.

கெய்ரோவில் உள்ள இண்டர்நேசனல் யூனிவர்சிடி தலைமையகத்தில் நடந்த அரபு வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார் அவர்.

அப்பொழுது அவர் கூறியது,
 
“துனீசியா, லிபியா, எகிப்து, யெமன் போன்ற நாடுகளின் சமீபகால வரலாற்றில் இருந்து பஸ்ஸார் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அடக்குமுறையாளர்களும்,  ஊழல்வாதிகளுமான ஆட்சியாளர்களை அதிகாரத்தில் இருந்து கீழே இறக்கிய அரபு வசந்தத்தைக் குறித்து புரிந்துக் கொள்ள பஸார் தயாராக வேண்டும். பிரச்சனை மேலும் சிக்கலாகும் முன்பு அவர் பதவி விலக வேண்டும்.

இரத்தக் களரியாக மாறிய சிரியா நகரங்களில் அமைதியை மீண்டும் நிலைநாட்ட இன்னமும் வாய்ப்புகள் உள்ளன. ஆட்சியில் தொடருமாறு தூண்டும் பிறருடைய  உபதேசங்களை பஸார் பொருட்படுத்த வேண்டாம். காரணம் நீங்கள் அதிக காலம் அந்த பதவியில் நீடிக்க முடியாது என்பது சிரியாவில் நிலவும் நிலைமைகளில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.  நாங்கள் சிரியா மக்களுடன் தான் உள்ளோம்.

அரபு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட எந்தவொரு நாட்டையும் அனுமதிக்க மாட்டோம். ஐக்கிய நாடுகள் அவையில் பூரண உறுப்பினராவதற்கான ஃபலஸ்தீனின் முயற்சியை அனைவரும் ஆதரிக்க வேண்டும்” என்று முர்ஸி தனது உரையில் கூறினார்.

சிரியா குறித்த முர்ஸியின் உரையில் வருத்தம் தொனித்தது.   “சிர்யா மக்களின் இரத்தம் இரவு, பகலாக சிந்தப்படுகிறது. இதற்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும். சிரியா மக்களின் இரத்தம் சிந்தப்படும் பொழுது நாம் தூங்கிக் கொண்டிருக்க கூடாது. அரபு நாடுகளின் அமைச்சர்களே! சிரியாவின் துயரத்திற்கு உடனடியான தீர்வை கண்டுபிடிக்க உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். நாம் முயற்சி செய்யாவிட்டால்,  உலகமும் தீவிர முயற்சியில் இறங்காது.” என கூறிய முர்ஸி,  தனது உரையை ,   “ஒரு நாள் மக்கள் அவர்களின் வாழ்க்கையை தீர்மானித்துவிட்டால் விதி அதற்கு பதிலளித்தாக வேண்டும். இரவு விலகியே தீரும். சங்கிலிகள் அறுத்தெறியப்படும்” என்ற பொருள் கொண்ட கவிஞர் அபீல் காஸிம் அஷ்ஷாபியின் கவிதையை கூறி முடித்தார்.

6 comments:

  1. Ivalavu vekam Palestine vidayahthil kaadupadi unkal arabu ekaathipathikalidam sollunkal

    ReplyDelete
  2. நீங்கள் இப்படி கதைத்தீர்கள் என்றால் உங்கள் ஆட்சிக் காலத்தை அமெரிக்காவும்,ஐரோப்பாவும் எண்ணத் தொடங்கி விடுவார்கள்.நீங்கள் எப்படித்தான் முயன்றாலும் அரபுலகம் வெள்ளைகாரனின் காலை நக்குவதை விடமாட்டார்கள்.ஒரு சின்ன விடயம் ஒரு சில அரபு விமான சேவைகளில் மதுபானம் கொடுத்து ஆள் பிடிக்கிறார்கள்.உங்கள் குரலைக் கொண்டு தடுத்துப் பாருங்கள்.சாராயம் கொடுத்து சம்பாதிக்க வேண்டிய அவசியம்
    அரபு நாடுகளுக்கு இல்லை .ஆனால் வெள்ளைகாரனை திருப்தி படுத்தவேண்டுமல்லவா,இதுதான் அரபு வசந்தம்.
    வாழ்க இஸ்லாமியாப் ?புரட்சி

    ReplyDelete
  3. sahotharar meeran nenka soluhindra vidyankaluku ellalm mutrupulli vikintra arampame arabu vasantham,oru vari atsiyil amara vipathum,athani vitu ahala vipathum allah oruvane ,amaricavum iropavum alla ??

    ReplyDelete
  4. 'அரபு வசந்தம்' என்ற பெயரிலேயே புரட்சி அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. அரபு வசந்தம் குறித்த சில விடயங்கள் மற்றும் அதன் ஒரு சில விளைவுகள் குறித்து முழுமையாகத் திருப்திப் பட்டுக் கொள்ள முடியாவிட்டாலும் கூட, 'அரபு வசந்தத்தைக்' குறை கூறி, அதனைப் போட்டு உடைப்பதனை விட, அதனைத் தட்டித் திருத்தி 100% 'இஸ்லாமிய வசந்தமாக' மாற்ற முயல்வதே சரியானது.

    ஹசனுல் பன்னாவின் தஸவ்பத் சிந்தனைகள், 'பீ ழிளாளில் குர்ஆன்' முதல் பல்வேறு நூல்களிலும் தாராளமாகவே தலைகாட்டும் செய்யத் குத்தூபின் அத்வைதம், அடக்கி வாசிக்கப் பட்ட உமர் அல் தில்மிசானியின் சமாதி வழிபாட்டுக் கொள்கைக்கான அங்கீகாரம் (*) போன்ற மார்க்க முரண்களில் ஊறி வளர்ந்த ஒருவராக மட்டும் முஹம்மத் முர்ஸியைப் பார்க்காமல், இஸ்லாமிய உலகில் மாற்றங்களை ஏற்படுத்த இவரைப் பயன்படுத்திக் கொள்வதும், சரியான பாதையில் மட்டும் செல்ல, எகிப்தை, முஸ்லிம்களை வழி நடாத்த அல்லாஹ் இவருக்கு சக்தியைக் கொடுக்க துஆ செய்வதுமே பொருத்தமாக இருக்கும்.

    படிப்படியாக மாற்றங்களைக் கொண்டுவருவார் என்று எதிர்பார்ப்பு வைப்போம், துஆ செய்வோம்.

    (* இவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து, இவர்களின் நல்ல பணிகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக)

    ReplyDelete
  5. La Voix ஆட்சி ஒன்று வந்துவிட்டதால் உங்கள் கருத்துக்கு உடன் படுகிறேன். ஆனால் அரபு வசந்தம் தற்பொழுது எண்ணெய் வசந்தமாக இருப்பதை எப்படி நியாயப் படுத்துவது. இராக், ஆப்கானிஸ்தான் யுத்தங்களில் பட்ட அனுபவத்தால் அவர்கள் (அமெரிக்க, மேட்கத்தயர்கள்) தற்பொழுது புதிய யுக்தியை கையாண்டு தமக்கு தேவையான நாடுகளை எதிர் கட்சிகளையோ,விரக்தியடைந்த குழுக்களையோ கொண்டு அவர்களுக்கு ஆயுதம் வழங்கி, அவர்கள் ரத்தத்தையும், பொது மக்கள் ரெத்தத்தையும் ஓட்டி நாடு பிடிப்பதுவல்லே இப்போதைய வசந்தம்? இமேஜ் கெடவும் மாட்டாது, இவர்கள் உயிர் பலியாகவும் மாட்டாது. எதிர்கால businness காக investment ஆய் செலவு பண்ணி ஆயுதம் கொடுக்கிறார்கள். வரு ஆட்சி கைப் பொம்மை தானே! எகிப்தில் நல்ல ஆட்சி வந்தால் எங்களுக்கும் சந்தோசம் தான். ஆனால் இவர்களுக்கு (இக்ஹ்வான்கள்) ஆட்சியை பிடிக்கு முன் உள்ள வேகம் கிடைத்த பின் காணவில்லையே? முதலில் மக்கள் பண்பட வேண்டும். அதைத்தான் அல்லாஹ்வின்தூதர் செய்தார்கள். ஆட்சியை கேட்காமலே அல்லாஹ் காலடிக்குக் கொடுத்தான். சமூக மாற்றமில்லா ஆட்சி அடித் தளம் இல்லா கட்டிடம்.. பாலஸ்தீனமும் இவர்கள் கை வசம் தான் உள்ளது என்பதைக் கருத்தில் கொள்ளவும். இருக்கும் அங்கீகாரத்தைக் கொண்டு எந்த ஒரு பெரிய move உம் எடுத்ததாக தெரியவில்லை. தடைகள் இருக்கும் தான். அதையே சொல்லி காலத்தைக் கடத்துவதேன்றால் எதற்காக ஆட்சிக்கு வந்தார்கள்? இது முன்னமே தெரியாதா? வெறுமனே சாடுவத்தாய் நினைக்காதீர்கள் அதிகாரம் கொடுக்கப் பட்டால் மக்கள் எதிர்பார்த்தால் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  6. சகோதரர் Saneej Sharifdeen அவர்களே, உங்கள் ஆதங்கம் புரிகின்றது. நீங்கள் குறிப்பிடாத சில ஆதங்கங்களும் எனக்கு உள்ளன. எனினும், இந்த விடயங்களில் தற்போதைக்கு விமர்சனப் பார்வையை கைக்கொள்ளாமல், 'நடப்பது நலமாகும்' (optimistic) என்று இருக்கவே விரும்புகின்றேன்.

    பிரார்த்தனைகளையும், எதிர்பார்ப்புகளையும் கைவிடாதீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.