கிழக்கு மாகாண தேர்தலில் ஒரு அதிசயம்..!
PP
மட்டக்களப்பில் இரண்டு வாக்காளர்களுக்காக, மாந்தீவில் ஒரு வாக்களிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாணசபைக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு மாந்தீவில் இரண்டே இரண்டு வாக்காளர்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு வாவியின் நடுவே அமைந்துள்ள மாந்தீவில், இவர்களுக்காக தனி வாக்களிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இந்த வாக்களிப்பு நிலையத்துக்கு படகு மூலம் அதிகாரிகள் வாக்குப்பெட்டியை கொண்டு செல்வர்.
மாந்தீவில் மக்கள் குடியிருப்புகள் எதுவும் இல்லை, ஆனால், தொழுநோயாளர்களுக்கான மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment