ஹமாஸ் முகாம்கள் மீது ஆக்கிரமிப்பு இஸ்ரேல் விமானத் தாக்குதல்
இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீன போராளி குழுவினரும், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் ராணுவமும் அவ்வப்போது திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இடைக்கால போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி இரு நாடுகளும் மோதிக்கொள்வது வாடிக்கையாகி விட்டது. கடந்த ஜூன் மாதத்தில் பாலஸ்தீன போராளிகள் தெற்கு இஸ்ரேல் பகுதியில் 150 ராக்கெட்டுகளை ஏவி அதிரடி தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சில் 15 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு காசா எல்லைப்பகுதியில் இயங்கி வரும் ஹமாஸ் என்ற இயக்கம் தான் காரணம் என்று இஸ்ரேல் வெளிப்படையாகவே அறிவித்தது.
இதையடுத்து பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் போராளிகள் முகாம் மீது இஸ்ரேல் அத்துமீறி விமான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் காசா எல்லையில் இயங்கி வந்த ஹமாஸ் இயக்கத்தின் பயிற்சி முகாமின்மீது இஸ்ரேல் விமானப்படையினர் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் உயிர்சேதம் ஏதுமில்லை.

Post a Comment