நெஞ்சு பொறுக்குதில்லையே...!
குட்டக்குட்ட குனிந்து கொண்டிருப்பதால் , அஸாத் சாலி எங்களை எல்லாம் மடையர்கள் என்று நினைத்துவிட்டார் போல இருக்கிறது.
அவர் மீது வைத்திருந்த கெளரவம், மரியாதை என்பன காரணமாக கொஞ்ச நாள் பொறுத்தேன் . பிறகு அவரின் " தொங்கக் கயிறு இல்லாத ....." பரிதாப நிலைக்காக அடுத்த கொஞ்ச நாட்களுக்கு தாங்கினேன் . அதன் பிறகு அவருடனான நட்பும் , தொடர்பும் அறுந்து விடக் கூடாதே என்பதற்காக யோசித்தேன் .
ஆனால் நெஞ்சு பொறுக்க முடியாத அளவுக்கு அவர் அத்து மீறி உளறத் தொடங்கிவிட்டதனால் , தாங்கிக்கொள்ள முடியாமல் இதனை எழுதுகிறேன் . என்னைப் போலவே இன்னும் பலர் இவ்வாறு எழுதுவதற்கு இருக்கிறார்கள் என்பதையும் சொல்லி வைக்கிறேன் . இன்றே முகப் புத்தகத்தில் ஓரிருவர் இவ்வாறு எழுதத் தொடங்கியுள்ளார்கள் என்பதையும் அவர் கவணித்திருக்கலாம்.
மஹிந்தவை ஓஹோ வென்று புகழ்ந்து இரண்டாவது தடவையும் அவர் ஜனாதிபதியாக முழுமையான பங்களிப்பை செய்து , எகிறி - எகிறி பார்த்துவிட்டு , இப்போது " சீச்சீ ....இந்தப்பழம் புளிக்கும் " என்கிற இவரின் மேல் இன்றைக்கும் எனக்கு அனுதாபம் இருக்கிறது . அதற்குக் காரணம் இவர் அவசரப்பட்டு கட்சி மாறியதால் பறிகொடுத்த கொழும்பு நகர பிதா ஆசனம் என்று சொன்னால் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்று நம்புகிறேன்.
இன்றைக்கும் அவரை நான் இங்கு விமர்சிக்க விரும்பவில்லை. அப்படி அவரைப்போல வரம்பு மீறி எவரையும் விமர்சிக்கிற அளவுக்கு நான் அறிவாளியோ, பெரீய்ய்ய்ய்ய அரசியல் வாதியோ அல்ல. மதிப்புக்குரிய அஸாத் சாலி அவர்களிடம் மிகப்பணிவுடன் பத்தே பத்து கேள்விகளை மட்டுமே கேட்க விரும்புகிறேன்.
அவர் இவற்றுக்கு பதில் தருவார் என்று ஆவலுடன் இருக்கிறேன்.
இதோ என் கேள்விகள் :
கேள்வி 1 : "அஸாத் சாலி முஸ்லிம் காங்கிரஸ்" என்று சிரச, சக்தி தொலைகாட்சிகளில் போடுகிறார்களே.. நீங்கள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரா ? முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராக நீங்கள் எங்கே, எப்போது பதிவானீர்கள் ? அங்கத்துவ இலக்கம் என்ன ?
கேள்வி 2 : முஸ்லிம் காங்கிரசில் தேர்தலுக்கு நின்றீர்கள் என்பதால் நீங்கள் முஸ்லிம் காங்கிரஸ் காரன் என்றால் ஐக்கிய தேசியக் கட்சியில் கடந்த பொதுத்தேர்தலில் நின்ற ஹக்கீம் , மனோ கணேசன் போன்றவர்கள் எல்லாம் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களாகவும், ரிஷாத் , அதாவுல்லா போன்றோர் சுதந்திரக் கட்சிக்காரர்களாகவும் அல்லவா இருக்கவேண்டும் ?
கேள்வி 3 : முஸ்லிம் காங்கிரஸ் உங்களை கெஞ்சி அழைத்து தேர்தலுக்கு டிக்கெட் தந்தார்களா ? அல்லது " சிவ பூசையில் கரடி " நுழைவது போல ரன்காவுடன் நீங்கள் தாருஸ்சலாமுக்குள் ஓடிப்போய் ஒட்டிக்கொண்டீர்களா ?
கேள்வி 4 : நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்வதற்கு ஒரு நாளைக்கு முன்னர் " நான் சுயேச்சை அணியாக மட்டக்களப்பில் குதிக்கப்போகிறேன் " என்ற நீங்கள் மறு நாளே, வாலைசுருட்டிக்கொண்ட தன் ரஹசியம் என்ன ?
கேள்வி 5 : சுமார் ஆறாயிரம் விருப்பு வாக்குகள் மட்டுமே பெற்ற நீங்கள் " முட்ட போட்ட கோழி " போல இவ்வளவு கத்துறீங்க , ஆனால் சுமார் நாலு லட்சத்திகும் அதிகமான விருப்பு வாக்குகளின் ( சுமார் 1>35>000 X 3 விருப்பு வாக்குகள் ) சொந்தக்காரர்கள் ஆமை போல இருக்கிறார்கள் . ஆறாயிரம் விருப்பு வாக்குகள் என்பது வெறுமனே இரண்டே இரண்டாயிரம் வாக்காளர்கள்தான் . ஆலமரத்தின் அடியில் முளைக்கும் புல்லுப்போன்ற இந்த சின்னத் தொகையுடன் , அந்த மரத்தையே பிடுங்கும் புயல் போல கூத்தாடுவது முட்டாள் தனம் என்று புரிகிற அளவுக்காவது நீங்கள் இன்னும் அரசியல் படிக்கவில்லையா ?
கேள்வி 6 : மு.கா தலைவர் ஹக்கீம் எந்த மேடையில் , எந்த ஊரில் தமிழர் கூட்டணியுடன் ஆட்சி அமைக்க வாக்குக்கேட்டார் , அல்லது எந்த மேடையிலாவது அரசுடன் ஆட்சி அமைக்கவே மாட்டோம் என்று மு.கா தலைவர் ஹக்கீம் சொன்னாரா?
கேள்வி 7 : " எங்களை கணக்கில்லெடுக்காமல் இருக்கிற அரசுக்கு எங்கள் பலத்தை காட்ட , தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேர்தல் முடிவுகளின் பின் எழுந்து நிற்க, மக்களே அணி திரளுங்கள் " என்றும் , தமிழர் கூட்டணி இப்போது சொல்கிற " உங்களுக்காகவும் பேசுவோம் " என்கிற இது அவசியம் இல்லை , " எங்களுக்காக எங்களாலேயே பேச முடியும் என்கிறதை நிரூபிக்கிற தேர்தல் முடிவுகளை இத் தேர்தல் தரும் " என்பது தவிர வேறு தொணியில் மு.கா தலைவர் ஹகீம் எங்காவது கதைத்திருக்கிறாரா ? ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் ? ( உங்கள் பங்காளி சிரச விடம் எல்லாக் கூட்டங்களினதும் ஒளிப்பதிவுகள் உள்ளதுதானே ! )
கேள்வி 8 : பள்ளி மற்றும் இனவாத பிரச்சனைகளை , மக்களின் நாடித்துடிப்பை புரிந்து கொண்டதால் மட்டுமல்ல உண்மையான உணர்வுடனும் தான் மு.கா தலைவர் ஹகீம் முழங்கினார் என்பதை உங்களால் மறுக்கமுடியுமா ? தேர்தலுக்கு மிக முன்னதாகவே தம்புள்ளை பள்ளி விசயமாக காரசாரமாக கதைத்த ஒரேஒரு அமைச்சர் மு.கா தலைவர் ஹகீம் மட்டுமே என்பதை உங்களால் இல்லை என்று சொல்ல முடியுமா?
கேள்வி 9 : தமிழர் கூட்டணியுடன் அமைகிற ஆட்சி நிலைக்கும் என்பதற்கு உங்களால் ஆதாரங்களை காட்டமுடியுமா ? அரசனும் இல்லாமல் , புருசனும் இல்லாமல் முஸ்லீம் காங்கிரஸ் நாடு ரோட்டில நிற்கிற நிலை வராது என்பதற்கு நீங்கள் தருகிற உத்தரவாதம் என்ன ?
கடைசிக் கேள்வி 10 : உங்களை தாருஸ்ஸலாமுக்கு கூட்டிக்கொண்டு வந்து தள்ளிவிட்டுப்போன ரங்கா மச்சான் , உங்கள தன்னன்தனியா பலிக்கிடாவாக விட்டு விட்டு தேர்தல் காலம் முழுவதும் வெளியே தலையே காட்டாம இருந்தது ஏன் ?
" இனி மின்னல் நிகழ்ச்சி முழுவதுமே முஸ்லிம் காங்கிரஸ்தான் " என்று ஒரு அண்டப் புளுகை அவிழ்த்து முஸ்லீம் காங்கிரஸ் போராளிகளை , எமாளிகலாக்கிய மகராஜா ஏஜன்ட் ஒரு நிகழ்ச்சி கூட நடத்தாம ; எங்க போய் தொலஞ்சார் என்று கொஞ்சம் சொல்லுங்களேன் !
இஞ்சமும் கேள்விகள் ஈக்கி , ஆனாக்க... ஒன்களுக்கு தமுள் வெலன்குறது கஷ்டமா ஈக்கும் என்கிரத சூட்டி இப்பைக்கி இது போதுமே !

அருமையான கேள்விகள் இவை போன்ற கேள்விகள் ஒவ்வொரு மு.கா உருப்பினரும் தங்களை தாங்களே கேட்டுக்கொள்ளனும்,அது மட்டுமல்ல முஸ்லிம்களும் சற்று யோசித்தால் சில விடைகள் பளிச்சென தெரியும்.
ReplyDeleteரிஷாதும் அதாவுல்லாஹ்வும் சுதந்திர கட்சியில் அதன் சின்னதில் ஒரு நாளும் போடி இடவில்லை எந்த தேர்தலும் அவர்கள் அவர்களின் பங்களிப்புடன் உருவாக்கபட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி என்ற பல் அரசியல் கட்சிகளின் கூட்டு முன்னனியிலேயே போட்டி இட்டு இருக்கின்றனர் இதுவரை எனவே அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைபை சார்ந்தோராக இருபரே ஒழிய சுதந்திர கட்சியினராக இருக்க எந்த முகாந்திரமும் இல்லை சுதந்திரகட்சி தேர்தலில் நின்று 20 வருஷம் ஆகிவிட்டது?
ReplyDeleteநண்பா நன்றாக சொன்னீர்கள். இந்த அசாத் சாலி ரமழான் காலத்தில் பாடசாலை நடாத்த ஆவண செய்ததாகவும் செய்திகள் ஏற்கனவே பரவின. இதன் உண்மை நிலை என்ன?
ReplyDeleteGood questions for Azath sally to answer I have another question How much money you spend to catch 2000 voters in the east? How much money you have got from diaspora ant TNA? How much you gave to Sriranka of Shakti TV? +- What is the Profit. Submit account.
ReplyDeleteஆசாத் சாலி மூ காவின் அங்கத்தவர் ஆகாமலேயே அவருக்கு சீட் வழங்கப்பட்டதா? அவர் மட்டக்களப்பில் பத்தாயிரத்துக்கு மேட பட்ட வாக்கை எடுத்துள்ளார். ஒருவர் வழங்கும் மூன்று வாக்குகள் அல்ல. மகான சபை தேர்தலில் ஒருவர் ஒருவருக்கு ஒரு வாக்கு மட்டுமே வழங்க முடியும். ரங்கா யார் என்று தெரிந்தும் அவரை உள் வாங்கியதன் மூலம் ஹக்கீம் முட்டாளாக்கி விட்டார் என்பதை ஹசீர் ஏற்றுக்கொள்கிறார். மட்டக்களப்பில் ஆசத்தும் ஹாபிசும் போட்டியிடாவிட்டால் ஒருவர் கூட வந்திருக்க முடியாது. கட்சி மாறாத தொண்டன் களின் வாக்குகளை பாருங்கள். அரசுக்கு பாடம் படிப்பிப்போம் என ஹக்கீம் கூறியது மறந்து விட்டதா ? அரசும் ஹக்கீமும் திட்டமிட்டே முஸ்லிம்களை ஏமாற்றுகிறார்கள் என உலமா கட்சி சொன்னது நூறு வீதம் உண்மையாகி உள்ளது. அதே போல் மூ கா அரசில் அங்கம வகிக்கும கட்சி என்று தெரிந்து கொண்டே அரசை விமர்சிப்பதட்காக அதனோடு இணைந்தது ஆசாத்தின் மடத்தனம்.
ReplyDeleteHAHAH SARIYAN KELVI
ReplyDeleteHi dears,
ReplyDeleteI can remember one song!
"Vaangi vanthen vaalai maram, vantha pinne athu thalai maram"
Now tooooooooo late thambi \Hazeer, your leader should think before bring Saali to east.
" kankedde pinne suriya uthayam enthappakam aanaal namakkenne poda?
Mr Haseer
ReplyDeleteYou all are the same. Talk according to the tune. Who is behind all these questions?
By the way it is not decent and unethical to say or write about ones accent of speaking the language. I am from Ampara district & I know the Colombo born Tamils & Muslims speak Tamil in different accent it does not mean that we can laugh at them.
I am sure you can't speak or even think of you speaking Sinhala & English the way Asath Sali speaks.
Pleasebe professional when you write in public
May Almighty Allah bless you all.
சகோதரர் ஹசீர், உங்கள் வாழ்க்கையில் கொஞ்ச நேரத்தை இந்த வீணாப் போனவனுக்காக waste பண்ணிடீங்க. "முஸ்லிம்களுக்கு தனியான கட்சி தேவையில்லை" என்று சொன்ன இவர் எப்பொழுது "தலைவர், தலைவர்" என்று சொல்லத் துவங்கினாரோ, அப்போதே நினைத்துக் கொண்டேன் உங்களுக்கு revert அடிப்பார் என்று. கட்சியின் முடிவெடுக்கும்விடயத்தில் உள்ள குறைபாடுகள் இது போன்ற "துத்திரிகளுக்கு" வாய்ப்பாக ஆகிவிட்டது. இவர்களுக்கு கேள்வி கேட்பதை விட்டு விட்டு ஆக வேண்டியதைப் பார்ப்பது நலம். மக்கள் பலத்த எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் ஐ சிம்மாசனத்தில் வைத்துள்ளார்கள். இதற்கு அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும்.
ReplyDeleteதகுதியானவர்களை தகுதியான இடங்களுக்கு நிரப்பி மக்களுக்கு சேவை செய்வது நலம்.
முக்கியமா இனத் துவேஷத்தை கக்கும் தமிழ் மீடியாக்களுக்கு சுடச்சுட, நறுக்கென்று பதில் அழிப்பது நலம்.
காலம் தாழ்த்துவது உங்களுக்கு மட்டுமல்ல, இலங்கை வாழ் முஸ்லிம்களையும் பாதிக்கும். ஆகவே இந்த வெட்டியின் matter விட்டு விட்டு தமிழ் மீடியாகளுக்கு பதிலளிக்குமாறு அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.
சகோதரர் ஹஸீர்,உங்களது சகோதரர் ஹக்கீம் தான் சமூகத்தை காட்டிக் கொடுத்து முஸ்லிம்களை மலினப்படுத்தி விட்டார் என்றால்,அதற்கு மேலாக ஒரு படி சென்று தாங்களும் வக்காலத்து வாங்கும் அரசிலை செய்கின்றீர்கள்,மறைந்த தலைவர் மர்ஹூம் அஸ்ரப் சேர் அவர்கள்,ஸ்ரீ.ல.மு.கா .ஆரம்பித்தமை சுதந்திரக்கட்சி-ஜக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் அநியாயத்தை எதிர்த்தே,ஆனால் கிழக்கில் சோரம் போன உங்களது சகோதரரை போன்றவர் பெரும் அநியாயக் காரர்.ரவூப் ஹக்கீம் செய்த வரலாற்று தவறை முஸ்லிம்,தமிழ் சமூகம் என்றும் மன்னிக்காது.கிழக்கில் ஸ்ரீ.ல.சு.க.முதலமைச்சர் ஒருவர் வருவதற்காகத் தான் சந்திகளில் மேடை போன்று பசப்பு வார்த்தைகளை பேசி அப்பாவி முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று,தனது சொகுசு வாழ்க்கைக்காக மஹிந்தவுக்கு விற்றது மட்டுமல்லாமல்,நியாயம் கேட்டு போராடும் போராளிகளை திட்டி தீர்க்கும் உம்மை போன்ற ஹக்கீமின் சகோதரனுக்கும்,சகோதரரனின் குணம் தான் இருக்கும்.கிழக்கில் தனிப்பலமாக முஸ்லிம் முதலமைச்சர் பெறும் சந்தரப்பத்துக்கு சாவு மடி அடித்ததும் அல்லாமல் நெஞ்சு வலிக்கு பொருக்குதில்லையே என்று நன்றிகெட்ட தனமாக அறிக்கைவிட்டிருப்பது அவமானச் செயல் என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சகோதரர் ரவூப் ஹக்கீமின் மமதை தலைக்கு ஏறிவிட்டது.
ReplyDeleteமஹிந்த அரசாங்கத்தில் 2 முஸ்லிம் அமைச்சுக்களை பெற்றுக் கொண்டுள்ளது தான் உமது சாதனை என்று பெருமை பேசுகின்றீர்களே,ஏன் இதற்கு முன்னர் இருந்த அரசில் அதே இரு முஸ்லிம் அமைச்சர்கள் இருக்கவில்லையா?,அமைச்சர் றிசாத்,அதாவுல்லா போன்றவர்கள் கிழக்கில் செயற்பாடுள்ள முதலமைச்சர் ஒருவரை தனித்துவமாக பெறுவதற்கு எடுத்த முயற்சிகளுக்கு தடையினை ஏற்படுத்தி முஸ்லிம்களின் தனித்துவமான அரசியல் முகவரியை பாதுகாக்க முற்பட்டதை தடுத்து,காட்டிக் கொடுக்குமு் அரசியலினை மீண்டும் செய்துள்ளதை எமது சமூகம் மண்ணிக்காது.கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷைகளையும்,எதிர்பார்ப்புக்களையும் அழித்த பாவத்தை செய்த தங்களது சகோதரன் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும்,உரம் சேர்க்கும் உங்களை போன்றவர்களை சமூகத்தின் எதிரிகள் தான்.