Header Ads



'கிழக்கு மாகாணசபை' - பதவிக்காக இழுபறிப்படும் அங்கத்தவர்கள்..!

முகம்மத் ஷௌகி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம்தான் இம்முறை மாகாண சபை ஆட்சியின் துரும்பு இருக்கிறது என்று எந்த வேளை அக்கட்சியின் தலைவர் திருவாய் மலர்ந்தருளினாரோ தெரியவில்லை, அத்துரும்பே அவரைச் சிண்டைப் பியத்துக் கொள்ள வழி செய்துள்ளது.

வழங்ப்பட்ட இரு மாகாண அமைச்சுக்களை யார் யாருக்குப் பகிர்வது என்ற பிரச்சினையால் ஒரு பெரும் யுத்தமே நடந்து கொண்டிருப்பதாக உள்ளகத் தகவல்கள் கசிகின்றன. இது பற்றித் தீர்மானிக்க நேற்று நடைபெறவிருந்த கூட்டம் இன்று பிற்பகல் ஒத்திப் போடப்பட்டதாகவும் இன்றும் அக்கூட்டம் நடைபெறவில்லையென்றும் அறியக் கிடைக்கிறது.

ஏறாவூர் நஸீர் ஹாபிஸூக்கும் சம்மாந்துறையைச் சேர்ந்தவருக்கும் அமைச்சுக்களை வழங்க மு.கா தலைவர் தீர்மானித்திருப்பதை அறிந்து கல்முனையில் தெரிவான அங்கத்தவர் தனது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளார். அதே வேளை திருகோணமலைப் பிரதேசத்துக்கு ஓர் அமைச்சு வழங்கப்பட வேண்டும் என்று புல்மோட்டையில் தெரிவான அங்கத்தவர் கொதித்தெழுந்திருக்கிறார்.

இதேவேளை, முதலமைச்சர் பதவி இரண்டரை வருடங்களின் பின்னர் மு.காவுக்குக் கிடைக்கும் என்றும் அது கிடைத்ததும் அதனை ஹாபிஸ் நஸீருக்கு வழங்கிவிட்டு ஹாபிஸ் நஸீரின் அமைச்சை திருகோணமலைப் பிரதேசத்துக்கு வழங்குவது என்றும் பேசப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் தனக்கு இரண்டரை வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பதவி வழங்கப்படவில்லை என்றும் தனக்கு வழங்கப்பட்ட முதலமைச்சர் பதவி முழுக்காலத்துக்குமாகும் என்றும் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தெரிவித்ததைத் தொடர்ந்து “கொதி நிலை” உச்சத்துக்குச் சென்றிருக்கிறது.

பாராளுமன்றப் பதவிகள் சம்பந்தமாக நான் எதையும் கோரவில்லை என்று மு.கா. தலைவர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்த போதும், இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளும் மூன்று பிரதி அமைச்சுக்களும் கோரப்பட்டதாகவும் பிரதியமைச்சில் ஒன்று கல்முனையைச் சேர்நத பா.உ. ஹரீஸூக்கு வழங்கப்படவிருப்பதால்தான் கல்முனையைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினருக்கு மாகாண சபை அமைச்சை வழங்க முன்வரவில்லை என்றும் தெரிகிறது. இது அந்த மாகாண சபை உறுப்பினரையும் அவரது ஆதரவாளர்களையும் கோபப்படுத்தியதால், “யாரும் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்ளாமல் சபையில் நடுநிலை வகிப்பது” அல்லது ”அரசுடன் சேர விருப்பமற்றவர்கள் எதிர்க் கட்சி ஆசனங்களில் அமர்வது“ என்றும் கதையாடல்கள் நடைபெற்றிருக்கின்றன.

சிலரின் பாராளுமன்ற அமைச்சு வேட்கைகளுக்காகத் தாங்கள் பந்தாடப்படுவதாக மு.காவின் மாகாண சபை அங்கத்தவர்கள் நினைக்கிறார்கள்.
ஆக, அரசின் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் முழுவதுமே முஸ்லிம் சமூக நலன் குறித்தவையாகவே, மு.கா. சொல்வது போல முஸ்லிம்களின் உரிமையின்பாற்பட்டவையாகவோ அல்லாமல் தமது பதவிகளுக்கானவை என்பது இந்தப் பிரச்சினைகளிலிருந்து தெரியவருகிறது.

அரசோடு இணைந்து ஆட்சியமைப்பது என்று முகா. தலைவர் உறுதியளித்த பின்பு இவ்வாறான பிரச்சினைகள் தலை தூக்கியிருப்பது பெரும் சிக்கலைத் தோற்றுவித்திருக்கிறது.
மத்திய அமைச்சரவையில் இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளில் ஒன்று தலைவருக்கும் மற்றது தவிசாளர் பஷீர் சேகுதாவூதுக்குமானது. கோரப்பட்ட மூன்று பிரதியமைச்சுக்களும் பா.உறுப்பினர்களான ஹஸனலி, பைஸல் காஸிம், ஹரீஸ் ஆகியோருக்கானவையென்று தெரிகிறது. ஆனால் இரண்டு பிரதியமைச்சுப் பதவிகளே வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன என்றும் அவற்றைப் பகிர்வதிலும் கூடச் சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்க முடியும்.
அமைச்சரவை மாற்றமொன்று நடைபெறும் போது இந்த அமைச்சுக்கள் வழங்கப்படவுள்ளதால் இப்பதவிகள் எங்களுக்குத் தரப்பட்டனவேயன்றி நாங்கள் கேட்டுப் பெறவில்லை என்று சொல்வதற்கு வாய்ப்பாக அமையும் என்பதாலேயே மு.கா. தலைவர் “நாங்கள் மத்திய அரசில் எதையும் கோரவில்லை” என்று அறிக்கை விடுத்திருப்பார் போல் தெரிகிறது.

எதுவாக இருந்த போதும் கிழக்கு மாகாண சபையின் பிரச்சினை தீர்ந்து விட்டதாக வெளியே தோற்றம் காட்டிய போதும் அது சிக்கல்களை எதிர் நோக்கியிருக்கிறது. இப்பிரச்சினைகளை மு.கா. தலைவர் ஏதோ ஒரு விதத்தில் தீர்க்காவிடில் ஒரு வருடத்துள் மீண்டும் கிழக்குமாகாண சபைக்கான ஒரு தேர்தலை எதிர் நோக்க வேண்டிவரலாம்.

அப்போது முஸ்லிம்களிடம் வாக்குக் கேட்பதற்கு மு.கா. எதை முன்வைப்பது என்பதுதான் அக்கட்சியின் முன்னால் உள்ள பெரும் சவாலாக இருக்கும்.
..

3 comments:

  1. Mr.Mohamed Shawky! don't worry.. next time Hackeem will come with some new magic talks to ask votes in the Eastern Province. He knows that the voters in the eastern province are utter fools as this had been proved in the concluded EPC election. This is not his fault but the people who vote for SLMC must take the responsibility.

    ReplyDelete
  2. Mr. Sawkky,
    Its so simple to Mr. hakeem.
    As soon as ministry sworns completed he will take all SLMC members to Dhambulla to Thank Ven.இனாமலுவே சுமங்கள தேரர் and make another request to plan breaking of Kekirawa Masjid during next election.

    " Naaraya Thaqbeer Allahu Akbar""""

    ReplyDelete
  3. எல்லோருக்கும் பதவி ஆசை. அல்லது பதவிக்கு போட்டியாய் வரக்கூடியவர்களை வேட்டுவதட்காய் காய் நகர்த்தி தங்கள் பதவிகளை தக்க வைத்துக் கொள்ளும் பிரச்சினை. சமூக நலனை கருத்தில் கொண்டு சேவை செய்யக் கூடியவர்களை, தகுதியானவர்களை முன்னிறுத்த யாரும் தயாரில்லை. இதற்கு பயன்படுத்துவது பிரதேசவாதம். அதை எண்ணையூற்றி நன்றாக எரிய வைக்க மறைமுகமாக பலர். பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுபவர்களே அதிகம் தவிர மக்களுக்கு என்று யோசிக்க யாரும் இல்லையே!!!

    ReplyDelete

Powered by Blogger.