அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (படங்கள்)
இக்பால் அலி
மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயவின் ஏற்பாட்டில் மத்திய மாகாணத்திலுள்ள குர்ஆன் மத்ரஸா மற்றும் பள்ளிவாயல் போன்றவற்றிற்கு நிதி உதவி வழங்குதல் மற்றும் அஹதிய்யாப் பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் கண்டி பதியூதீன் மஃமூத் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்கவுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்படுவதையும் முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக மாணவன் ஒருவனுக்கு சான்றிதழ் வழங்குவதையும் அருகில் மத்திய மாகாண சபை உறுப்பினர் மர்ஜான் மாஸ்டர் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிய முன்னணியின் தேசியத் தலைவர் சட்டத்தரணி ரஷட் எம். இம்தியாஸ் உள்ளிட்ட பிரமுகர்கள் அருகில் நிற்பதையும் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.



Post a Comment