பலஸ்தீன் மீது ஆக்கிரமிப்பு இஸ்ரேல் விமானத் தாக்குதல் - 4 பேர் வபாத்
tn
இஸ்ரேலின் விமான தாக்குதலில் காசாவில் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் மத்திய மாவட்டமான மகாசியில் நேற்று முன்தினம் இஸ்ரேல் இந்த வான் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் மூன்று சிவிலியன்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதோடு மற்றுமொருவர் மருத்துவமனையில் வைத்து மரணமடைந்துள்ளார். இந்த வான் தாக்குதல் கிழக்கு மகாசி அகதி முகாம் மீதே நடத்தப்பட்டுள்ளதாக காசா நிர்வாகம் கூறியுள்ளது.
இதில் இஸ்ரேல் கார் ஒன்றை இலக்குவைத்தே இந்த தாக்குதலை நடத்தியதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலை இஸ்ரேல் இராணுவமும் உறுதி செய்துள்ளது. காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்த தயாரான தீவிரவாதிகள் மீதே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியது என இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டு ள்ளார். இந்த குழு ஏற்கனவே இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல்களை நடத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment