அலிசாஹிர் மௌலானாவின் விளக்கம்..!
எமது இணையமானது அண்மையில் ''பிள்ளையான் எப்படி வெற்றிபெற்றார், மௌலானா அச்சுறுத்தப்பட்டார..? என்ற தலைப்பில் தமிழ் ஊடகங்களில் வெளியாகிய செய்திகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்படாத விடயம் என்றுகூறி தகவலை வெளியிட்டிருந்தது.இந்நிலையில் எமது இணையமானது இதுபற்றிய மேலதிக விபரங்களை அறிந்தகொள்ளும் நோக்குடன் இன்று வியாழக்கிழமை (13-09-2012) நண்பகல் வேளையில் அலிசாஹிர் மௌலானாவின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்டோம். எம்மை அறிமுகப்படுத்திய பின்னர் மேற்சொன்ன உறுதிப்படுத்தப்படாத தகவல் குறித்து அவரிடம் வினவினோம்.
'' நான் அச்சுறுத்தப்படவில்லை. பசில் ராஜபக்ஸ அச்சமயம் மட்டக்களப்பு வரவில்லை. அவர் அந்தவேளை நாட்டில் இருக்கவில்லை'' என அலிசாஹிர் மௌலானா கூறிக்கொண்டு இருக்கையிலேயே அவரின் கையடக்க தொலைபேசி துண்டிக்கப்பட்டது.
விருப்பு வாக்குகளின் அடிப்படையில் 4 ஆவது இடத்தில் நின்ற பிள்ளையான் எப்படி வெற்றி பெற்றார்..? உங்கள் தோல்வியை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? தேர்தலில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லையா? என்ற மேலதிக கேள்விகளை தொடுக்கும் நோக்குடன் நாம் மீண்டும் மௌலானாவின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்டோம். மணி அடித்துக்கொண்டிருந்தது. இருந்தும் அவர் விடை பகரவில்லை.
பின்னர் மீண்டும் அவரின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்டோம். அப்போது அவரின் தொலைபேசி 'ஓப்' செய்யப்பட்டிருந்தது.
Gappundu irunga.. aalunar pathavi tharukinroam enru janathipathi sonnaro theriyavillai..poruththirunthu parpoam.
ReplyDeleteஅலி சாகிர் மெளலானா அவர்கள் முழுமையான விளக்கம் ஒன்றை வழங்கி இருக்க வேண்டும். ஊடகங்களின் கேள்விகளில் இருந்து தன்னை தவித்துக் கொள்வது, ஊகங்களை வலுப்படுத்தவே உதவும்.
ReplyDeletevery good answer
ReplyDelete