மிருக பலியை தடுக்க சட்டம் கொண்டுவருவோம் - ஹெல உறுமய சூளுரை
vi
ஜனாதிபதிக்கும், நாட்டுக்கும் ஆசி வேண்டியே முன்னேஸ்வரம் காளி கோவிலில் மிருக பலி நடத்தப்படுவதென்றால் அதனைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய சவால் விடுத்துள்ளது.
மிருக பலியைத் தடுப்பதற்கு மிக விரைவில் பாராளுமன்றத்தில் சட்ட மூலமொன்றைக்கொண்டு வரவுள்ளதாகவும் ஹெல உறுமய தெரிவித்தது. இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழு உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கை சிங்கள பௌத்த நாடு. பௌத்த மதம் மட்டுமல்ல, இந்து மதமும் மிருக பலியை அனுமதிக்கவில்லை. மிலேச்சத்தனமான காட்டுமிராண்டித்தனமான மிருக பலியை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். இதனைத் தடுப்பதற்கு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டோம், மக்களைத் தெளிவுபடுத்தினோம். நீதிமன்றம் சென்றோம். ஆனால் முடியாமல் போய் விட்டது. எனவே இலங்கையில் மிருக பலியைத் தடுப்பதற்காக பாராளுமன்றத்தில் சட்ட மூலமொன்றைக் கொண்டு வரவுள்ளோம்.
அத்தோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மீண்டும் கோரிக்கை விடுக்கின்றோம். இந்த மிருக பலி நடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். பொறுப்புள்ளவர்கள் இவ் விடயத்தில் தலையிட வேண்டும்.
ஜனாதிபதிக்கும் நாட்டுக்கும் ஆசி வேண்டியே மிருக பலி நடத்தப்படுவதாக முன்னேஸ்வரம் காளி கோவில் பூசகர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியானால் மிருக பலி இடம்பெறும் தினத்தன்று அங்கு என்ன நடக்கின்றது என்பது மக்களுக்கு தெரிய வேண்டும்.
எனவே, ஊடகவியலாளர்களை அனுமதிக்க வேண்டும். அங்கு இடம்பெறும் நிகழ்வுகளை மக்கள் தொலைக்காட்சிகள் மூலம் பார்ப்பதற்கான நடவடிக்கைகளை கோவில் நிர்வாகத்தினர் முன்னெடுக்க வேண்டும். இந்தச் சவாலை கோவில் நிர்வாகத்தினர் ஏற்றுக் கொள்ளத் தயாரா என்றும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

மிருக பலி என்று கூச்சல் போடுபவர்கள், நாட்டில் நடக்கும் மனித உயிர்ப் பலிகளையும், பாலியல் வன்முறைகளையும் தடுக்க நடவடிக்கை எடுக்கட்டுமே பார்ப்போம்.
ReplyDeleteஉயிர்க் கொலை என்ற ரீதியில், மீன்பிடி, கோழிப்பண்ணைகள் என அனைத்தையும் தடை செய்ய வேண்டுமே? செய்வார்களா?
நாட்டை பிரித்து கொடுப்பதற்கு வழி ஏற்படுத்தி தர சட்டம் கொண்டுவர உறுமய ஆசைப்படுகிறது.யானை தன் தலையில்
ReplyDeleteமண் அள்ளிப் போடா நினைக்கும் போது யார் தடுத்தும் என்ன பயன்.மஞ்சள் துண்டுக்காக பெற்ற தாயை கொள்ளலாம்.
ஆனால் மிருகங்களை ?