Header Ads



'முஸ்லிம்களிடம் காணப்படும் சிறப்புத் தன்மை' - கண்டி உதவித் தூதுவர் ஏ.நடராசா

இக்பால் அலி
 
முஸ்லிம்களிடம் எந்த சமூக இனத்தவரிகளிடமும் கண்டு கொள்ள முடியாத ஒரு சிறப்பு  தன்மை இருந்து கொண்டே இருக்கிறது.  அது அவர்களது முகவனத்தில் காணப்படும் சிரிப்புத் தன்மையாகும். நான் பல நூற்றுக் கணக்கான நாடுகளுக்கச் சென்றுள்ளேன். எப்பொழுதும் அவர்களது  முகம் மலர்ந்திருப்பதையே பார்த்திருக்கின்றேன் என்று கண்டி இந்திய உதவித் தூதுவராயலத்தின் தூதுவர் ஏ. நடராசா தெரிவித்தார்.
 
அக்குரணை ஜம்மியதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் மலையக கல்வி அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கு அக்குரணை ஹஸ்னா பெரிய பள்ளிவாசல் கட்டிடத்தில் அக்குரணை ஜம்மியதுல் உலமா சபையின் கேட்போர் கூடத்தில் ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் எம். சீ.எம் சியாம் தலைமையில் நடைபெற்றது. அக் கருத்தரங்கின் போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கண்டி இந்திய உதவித் தூதுவர் எ. நடராசா அங்கு இவ்வாறு குறிப்பிட்டார்.
 
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
 
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மிக நீண்ட காலமாக நெருக்கமான உறவு உள்ளன. அதேவேளை மலையகத் தமிழ் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது. அதன் காரணமாக  மலையக மக்களின் நலன் கருதி கல்வி , சுகாதாரம் போக்குவரத்து எனப்பலதரப்பட்ட பங்களிப்புக்களை இந்தியா செய்து கொண்டிருக்கிறது. மலையக முஸ்லிம்களுக்கும் தேவையான உதவிகளைக் கண்டறிந்து செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். இது வரை மலையக முஸ்லிம் மக்கள் எங்களிடம் எந்த உதவியினையும் கேட்டு வருவதில்லை. அவர்களுக்காகவும் எங்கள் வாசல் கதவு எப்போதும் திறந்து உள்ளதாக அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.
 
இந்நிகழ்வில்  அஷஷய்க் எம். ஏ. எம். சியாம் தலைமையுரை நிகழ்த்திய போது பின்வருமாறு குறிப்பிட்டார்
 
எமது ஜம்இய்யதுல் உலமா சபையிலே 200 க்கும் மேற்பட்ட ஆலிம்கள் மார்க்க (அறிஞர்கள் ) உறுப்பினர்களாக செயற்படுகின்றனர். நாம் ஊரினது ஆன்மீகம், கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், சமூகமேம்பாடு போன்ற விடயங்களில் ஈடுபடுகின்றோம். ஆன்மீகம் சம்பந்தமான பயிற்ச்சிப்பாசறைகளும், பயான் நிகழ்வுகளும் ஆண்களுக்கும், பெண்களுக்குமாக வேறுவேறு பிரிவுகளாக நடாத்தப்படுகின்றன. கலாச்சார விழுமியங்களை பாதுகாப்பதிலும்,; முடியுமான அளவு சமூக சீர்கேடுகளை தவிர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்கான சிரமதான ஏற்பாடுகளை செய்வதுடன் விழிப்புணர்வு நிகழ்வுகளையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நடாத்தப்படுகின்றன.
 
ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகளான வீடுகள் கட்டடிக் கொடுப்பதும், புனர்நிர்மாணம் செய்வதும், மின்சாரம், தண்ணீர் போன்ற அத்தியவாவசிய இணைப்புக்களை பெற்றுக் கொள்ள உதவிகள்  செய்து கொடுத்துள்ளோம். எமது ஊருக்கு வெளியே ஏற்பட்ட சமூகப்பிரச்சினைகளான வெள்ளப் பெருக்கு, சுனாமி, போன்ற ஏனைய அனர்த்தங்களின்போது எமது மக்களிடம் பணமாகவும், பொருளாகவும் வசூலித்து உதவி செய்தமை செய்கின்றமை ஏராளம், எமது ஊரின் அனைத்துப்பள்ளிவாசல்களும் எமது நிர்வாகத்தின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்குகின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
 
இந்கநிழ்கவின் ஏற்பாட்டுக்கான ஒருங்கிணைப்பாளரும் உளவள ஆலோசகரான  ஐனுடீன் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் மர்ஜான் மாஸ்டர், அக்குரணை பிரதேச சபையின் தவிசாளர் சிம்சான் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
 



 

2 comments:

  1. ஏன் மலையகம் இலங்கைக்கு வெளியேயா இருக்கிறது.மலையக முஸ்லிம்,மற்றவர்கள் என்ன,எந்த முஸ்லிம்கள் எல்லோரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம்கள் என்று சொன்னால்உங்கள் தர்ஜாக்கள் குறைந்தா போய் விடும்.அடி விழும் போது காக்கா,சோனி ,மரகலைய என்ற ஒரே அடிதான். முஸ்லிம்களை பிரித்து வைத்துப் பார்ப்பதில்
    யாருக்கு என்ன சந்தோசம்.கலிமா சொன்ன,சொல்லாத பரம்பரையில் வந்த எல்லோரையும் ஒரே கண்கொண்டுதானே
    பார்க்க வேண்டும்.200 க்கும் அதிகமான ஆலிம்கள் இருப்பதாக பீற்றிக் கொள்வதில் என்ன பிரயோசனம்.முதலில் சத்தியம் எது அசத்தியம் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு உங்கள் பயிற்சி பாசறைகளை இன்ஷா அல்லாஹ்
    ஆரம்பியுங்கள்

    ReplyDelete
  2. mr meeran ungada uorla how many ulamas is there why your jelase ? alhammdulillah in thats area have more then 200 aalim

    ReplyDelete

Powered by Blogger.