இலங்கை முஸ்லிம் உம்மா போராட்டத்திற்கு தயார்...!
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும், புனித இஸ்லாத்தையும் இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் வெளியிடப்பட்ட “முஸ்லிம்களின் அப்பாவித்தனம்” என்ற திரைப்படத்தை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளன.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் பல்வேறு பிரதேசங்களில் கடையடைப்புடன் ஹர்த்தால் இடம்பெறவுள்ளதுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறவுள்ளன. இதேவேளை, இன்றைய தினம் கொழும்பிலும் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதுடன் அமெரிக்காவுக்கும் திரைப்பட தயாரிப்பாளருக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பப்படவுள்ளன.
கொழும்பில் பாரிய அளவில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெறவுள்ள இந்த மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சகல மக்களும் கலந்து கொள்ளுமாறு சர்வமத தலைவர்களும் அரசியல் பிரமுகர்களும் அழைப்பு விடுத்துள்ளதுடன்,
பெளத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், சகல முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அமெரிக்காவுக்கு எதிரான ஆர்பாட்ட பதாகையில் அமெரிக்க கொடி போடப் பட்டுள்ளது. முஸ்லிம்களின் கொடி தான் அங்கு போடப் படப் பட வேண்டும்.
ReplyDeleteஅமெரிக்க கொடியை நாம் கவுரவப் படுத்தக் கூடாது. அது தொங்க விடவோ அல்லது பதாதைகளில் போடவோ படக் கூடாது.
Allahu Akbar Allahu Akbar
ReplyDelete