Header Ads



குவைத்தில் நோன்பு காலத்தில் மாத்திரம் 1200 பேர் இஸ்லாத்தை ஏற்றனர்

குவைத்திலிருந்து பிபிலை ஜாபிர் மெளலவி
 
குவைத் நாட்டில் இருக்கும் இஸ்லாத்தை அறிமுக படுத்தும் நிலையத்தினூடாக (islam presentation committe )  இம்முறை குறிப்பாக புனித நோன்பு மாதத்தில் மாத்திரம் ஆயிரத்து இருநூறு பேரளவில் புனிதமிகு தீனுல் இஸ்லாத்தை தழுவினார்கள்.
 
அவர்களில் இலங்கை, பிலிப்பைன்ஸ், எதியோப்பியா, இந்தியாவின் கேரளா, தெலுங்கு, ஹிந்தி, கன்னட, தமிழ், போன்றோரே அதிகம். குவைத்தில் கிட்டத்தடட பன்னிரெண்டுக்கும் அதிகமான கிளைகள் இஸ்லாத்தை அறிமுக படுத்துவதற்காகவும் அரபு மொழி தெரியாதவர்களுக்கு அரபு மொழி இலவசமாக போதிப்பதற்கும் குவைத் அவ்காப் அமைச்சின் மூலம் ipc எனும் பெயரில் அனைத்து மொழி சார்ந்த மார்க்க மேதைகளை வைத்து நடத்தப்படுகிறது.
 
அரபு மொழி அல்லது ஆங்கில மொழி மூலம் மேலதிக விபரங்களை     www .ipc -kw .com எனும் வளைய தளத்தினூடாக  பெறலாம்.

மேலும் இலங்கையில் இருந்து தொழில் நிமித்தம் வரும் முஸ்லிமல்லாத  தாதியர்கள் மற்றும் அதிகமான தொழிலாளர்கள் போன்றோருக்கு இலவசமாக அரபு மொழி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து அவர்களுக்கும் பெரியதொரு சேவையை இந்நிலையம் செய்கிறது.
 
 

No comments

Powered by Blogger.