Header Ads



நீரில் மூழ்கி மாணவன் வபாத் - அறுகம்பை கடலில் சம்பவம்

TN

பதுளையை சேர்ந்த பாடசாலை மாணவன் பொத்துவில் அறுகம்பை கடலில் மூழ்கி மரணமானார். இந்த அகால மரணம் 20ம் திகதி, திங்கட்கிழமை 12.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. கம்பளையை பிறப்பிடமாக கொண்டவரும் பதுளை கெப்பட்டிபொள வீதியில் உள்ள தமது உறவினர் வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று க.பொ.த. உயர்தர பரீட்சை இவ்வருடம் எழுதிய முகம்மது சறும் அமானுல் ஹக் எனும் 18 வயது மாணவனே மரணமானார்.

தமது குடும்பத்துடன் நோன்புப் பெருநாளை உல்லாசமாக கொண்டாட அறுகம்பை சென்று கடலில் குளிப்பதற்காக உறவினர்களுடன் கடலில் இறங்கிய போது, பாரிய அலை அடித்து ஆழத்துக்கு இழுத்து செல்லப்பட்ட இவர் மூச்சுத்திணறி மரணமானதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் மற்றும் கடற்படையினரால் மீட்கப்பட்ட சடலம் பொத்துவில் வைத்தியசாலையில் வைத்து பொத்துவில் மாவட்ட நீதவான் மன்ற நீதிபதி ஐ.என். றிஸ்வான் அவர்களால் மரண விசாரணை செய்யப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.