முஸ்லிம் சிறுமியை வெட்டிக்கொன்றவனை தூக்கில்போட கோரிக்கை (படங்கள் இணைப்பு)
![]() |
| 6 வயது சிறுமி பாத்திமா அப்ரா |
எம். எஸ். பாஹிம்
வெலிகம பிரதேசத்தில் வைத்து ஆறு வயதுடைய சிறுமியை குரூரமான முறையில் வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைதான சந்தேகநபர் சார்பாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகக் கூடாது என கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இத்தகைய கொடூர மனம் படைத்தவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
முதலாம் தரத்தில் கல்வி பயிலும் வெலிகம கோட்ட கொடையைச் சேர்ந்த பாத்திமா அப்ரா கடந்த செவ்வாய்க்கிழமை கோடரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார். இவரின் முகத்திலும் காயங்கள் காணப்பட்டன. கொலை செய்யப்பட்டு வாழைப்பற்றை ஒன்றுக்குள் வீசப்பட்டிருந்த நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. இந்த இளம் பிஞ்சை கசக்கி வீசிய பாதகன் ஊர்மக்களினால் அடித்து பொலிஸில் ஒப்படைக்கப்பட்டிருந்தார். சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலே குறித்த பாதகனுக்காக சட்டத்தரணிகள் யாரும் ஆஜராக வேண்டாம் என சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரியுள்ளனர். இத்தகையவர்களுக்கு அதி உச்ச தண்டனை வழங்குவதன் மூலமே இத்தகைய குரூரமான சம்பவங்களை தடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டனர்.
இதேவேளை நீதவானின் உத்தரவுக்கமைய மேற்படி சம்பவத்தை நேரில் கண்ட சிறுமியுடன், கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் நேற்று வெலிகம பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் அளிக்கச் சென்றிருந்தனர்.
ஆனால் ஓரிரு மணி நேரங்கள் காத்திருந்தும் பொலிஸார் உதாசீனமாக நடந்து கொண்டதோடு, சிறுமியிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கவில்லை என அறிய வருகிறது. இது தொடர்பில் தமது விசனத்தை தெரிவித்த அவர்கள், அங்கிருந்து வெளியேறியதாகவும் அறிவிக்கப்படுகிறது.
‘இது தொடர்பில் தலையிட்ட பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிறுமியின் வாக்குமூலத்தை பதிய நடவடிக்கை எடுப்பதாகவும், சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை நடத்துவதாகவும் கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் உறுதியளித்ததாக இறந்த சிறுமியின் பெரியப்பாவான சாபி தெரிவித்தார்.
இதேவேளை சந்தேக நபரிடம் பெற்ற தகவலின்படி கொலைக்குப் பயன் படுத்தப்பட்ட கோடரி சந்தேகநபரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டதோடு அங்கிருந்து ஆபாசப்பட சீடிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
பூச்செண்டு தருவதாக கூறி ஏமாற்றியே சந்தேக நபர் இந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளதோடு, அதன் பின்னரே சிறுமி கொல்லப்பட் டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் சில வருடங்களுக்கு முன்னர் மனநல பாதிப்பிற்காக சகிச்சை பெற்றவர் எனவும், தற்பொழுது சிறந்த மனநிலையுடன் உள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இவர் மோசமான நடத்தைகளுடையவர் எனவும் பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து பார்த்தது தொடர்பில் முறைப்பாடுகள் உள்ளதாகவும் அறியவருகிறது.
இந்த பாதகனுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என சிறுமியின் இறுதிக்கிரியையில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். சந்தேக நபருக்கு ஏற்படும் நோயைக் குணப்படுத்த சிறுவர் ஒருவரை பலியிட வேண்டும் என்ற நம்பிக்கை இவர்களின் குடும்பத்தில் காணப்பட்ட தாகவும் அதனால் சிறுமி கொலை செய்யப்பட்டி ருக்கலாம் எனவும் ஊர் மக்கள் சிலர் சந்தேகம் தெரிவித்தனர். tn
![]() |
| கோடரியால் வெட்டிப படுகொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமி பாத்திமா அப்ராவின் ஜனாஸா..! |


இந்த செய்தியை இன்னமும் ஜீரணிக்க முடியாவில்லை. குருர மனம் படைத்த இத்தகையோர் எவ்வினமாக சாதியாக இருப்பினும் உரிய உயர் தன்டைனைகளை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இவர்களால் பலர் மேலும் பாதிக்கப்படுவர். இத்தகைய அநீதிகள் முஸ்லிம் சமூகத்திக்கு நடக்கும் போது மட்டும் ஏனைய ஊடகங்கள் அடக்கி வாசிக்கின்றனர். மேலும் மனநோயாளி என்றும் அடையாளப்படுத்தி நிகழ்வின் பாரதூரத்தை மறைத்து விடுகின்றனர்.
ReplyDeleteநீதிக்காக முடிந்தவரை போராடுவோம். எனினும் இந்நாட்டில் நீதியின் கண்கள் கட்டப்பட்டுள்ளன என்பதற்கு பல சம்பவங்கள் உதாரணமாக உள்ளன. இக்கொடூர செயலைச் செய்த பாதகனையும், அவனை பாதுகாக்க முயல்பவர்களையும் அல்லாஹ்விடம் பொறுப்பு சாட்டுவோம்.
ReplyDeleteஓருகாளம்வரும் கொள்ளப்படுவருக்கு தெரியாதாம் அவர்ஏன்கொள்ளப்படுகிறார் என்ரும் கொள்பவருக்கும் தெரியாதாம் அவர்ஏன்கொலைசெய்கிரார்என்ரும் நபிமொழி.
ReplyDeleteஇதை இத்தோடு விட்டு விடாமல், ஊடகங்களின் உதவியை நாடி சரி அதி உயர்த்தண்டனையை வங்கி கொடுக்கவும்.
ReplyDeleteஇன்னளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
Innalillahi we innah ilaihi rajiuoon
ReplyDeleteJ.Jasry
Member of pradeshiya Sabah - Mutur
நேற்று இந்த குழந்தைகெனில் நாளைக்கி நம் குழந்த்தைக்கி மனநோயோ மன்னாங்கட்டி நோயோ எதைசாக்காக வைத்தும் கொலையாளியை சும்மாவிடகூடாது இன்று மனநோயாளிகள் வேஷம்போட்டே நாட்டில் கொலையாளிகள் தப்பித்துகொண்டிருக்கும் நிலை அதிகரிக்கிறது!!! அள்ளி அணைத்து பாசம் காட்டி செல்லம் கொண்டாடும் பிஞ்சை இப்படி அநியாயமாக.. எப்படித்தான் மனம் வந்த்தோ நினைதாலே வேதனையால் உள்ளம்பதருகிறது
ReplyDeleteசகோதரர் nawasdeen சொல்லுவது சரிதான்.
ReplyDeleteஒரு சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் ஒரு சிறுமி அவளது உறவினரால் கொலை செய்யப் பட்ட பொழுது, அந்த விடயத்தில் ஊடகங்கள் காட்டிய அக்கறையை, இந்தச் சிறுமியின் விடயத்தில் காட்ட மறந்து/ மறுத்து விட்டன. கொலையாளி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவன் என்பதனால் இந்த புறக்கணிப்போ?
Well said bro Fshlin Mohammed.
Kinniyavil Faleel PHI aniyaamaaha adiththuk kollappattar, ippothu inthap pinchu sirumi. Aanal kolai seithavan mana noyinaal pathikkap pattavan entruthaan antrum sonnaarhal intrum solhiraarhal.Naattil ellorukkum mana noi thaan polum.enna kodumayappa ithu.
ReplyDeleteUlahil manithaafimaanam seththu vittathu!