Header Ads



யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில் நோன்புப் பெருநாள் தொழுகை


எதிர்வரும் நோன்புப் பெருநாள் தொழுகையை யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பள்ளிவாசல்களில் நிர்வாக சபைகள் அனைத்தும் இணைந்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன. சின்ன மொஹிதீன் பள்ளிவாசலில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நடைபெற்றுள்ள கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் சகல பள்ளிவாசல்களுக்கும் இதற்கான பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜின்னா மைதானத்தில் நடைபெறவுள்ள பெருநாள் தொழுகை ஆண், பெண் இருபாலாரும் கலந்துகொள்ளமுடியும் என்பதுடன், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமெனவும், இதற்காக மைதானத்தின் நடுவே பெரிய திரைகள் தொங்கவிடப்படுமெனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

7 comments:

  1. Masha Allah..it is nice to hear..Nawasdeen

    ReplyDelete
  2. நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு உயிரூட்ட மேற்கொள்ளப் பட்ட இந்த முயற்சி பாராட்டத்தக்கது. இதனை சாத்தியமாக்க யார் யாரெல்லாம் பாடுபட்டார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்.

    மார்க்கத்தின் பல விடயங்களில் பின்தங்கி இருந்த யாழ்ப்பாணம், இந்த விடயத்தில் பல முஸ்லிம் ஊர்களை முந்திவிட்டது, மாஷா அல்லாஹ். மேற்கொள்ளப் பட்ட தீர்ர்மானம், எவ்வித இடையூறுகளுமின்றி வெற்றிகரமாக செயல்படுத்தப் பட இறைவனைப் பிரார்த்திப்போம்.

    மார்க்கத்தின் ஏனைய விடயங்களிலும் யாழ்ப்பாணம் முன்னேற்றம் காண, முன்னுதாரணமாக செயல்பட அல்லாஹ்விடம் கை ஏந்துவோம்.

    உடனடியாகவே செய்தியைத் தந்த யாழ்.முஸ்லிம் இணையத்தளத்திட்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்லா . கடந்த நாட்பது ஆண்டுகளாக தப்லீக் ஜமாஅத் செய்த மாபெரும் புரட்சியின் ஒரு வெளிப்பாடே இந்த ஒற்றுமையான தீர்மானமாகும். பெருநாள் தொழுகை பள்ளியிலும் நடத்தலாம். இடம் போதாதவிடத்து மைதானத்தில் நடத்தலாம். பெருநாள் அன்று மட்டும் பெண்களுக்கு இவ்வாறன பெருநாள் தொழுகையில் கலந்து கொள்ளவும் விளையாட்டுப் போட்டிகளை மறைந்திருந்து பார்க்கவும் அனுமதிக்கப் பட்டுள்ளது.
    இந்த எடுத்துக் காட்டான விடயம் இலங்கையின் சகல ஊர்களிலும் பின் பற்றப் படவேண்டும். இலங்கையில் பெரும் பாலான பள்ளிகள் ஆண்கள் பெண்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் தொழுகை நடத்த போதுமான இடத்தை கொண்டிருக்க வில்லை. எனவே அவ்வாறான ஊர்களில் உள்ளவர்கள் பெருநாள் மைதானம் ஒன்றை ஏற்பாடு செய்து அங்கு தொழுகை நடத்துதல் வேண்டும்.
    அதே வேலை நூறு சதவிகிதம் முஸ்லிம் பெண்மணிகள் பூரணமான பர்தா வழிமுறைகளை பின்பற்றும் வரை திரைகள் தேவை என்பதையும் உலமாக்களும் ஊர் மக்களும் கருத்தில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  4. @ Mohamed Irfan,

    நாற்பது வருட மாபெரும் புரட்சியின் வெளிப்பாடு பற்றிப் பேசும் நீங்கள், கடந்த வருடமும் இதே போன்று ஜின்னா மைதானத்தில் பெருநாள் தொழுகை நிறைவேற்ற தீர்மானம் மேற்கொள்ள பட்டபொழுது யார் அதனைக் குழப்பினார்கள், அதற்கெதிராக யார் ஜும்மாவில் பயான் செய்தார்கள் என்பதனை யாழ்ப்பணத்தில் இருந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டால் 39 ஆவது வருட மாபெரும் புரட்சி எந்த லட்சணத்தில் இருந்தது என்பதனையும் தெரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  5. அல்ஹம்துல்லில்லா நல்லமுடிவு 1990யில்புலிபயங்கரவாதிகலினால் இந்தமைதனத்துக்குவரசொல்லிஆயுதமுனையில்விரட்டினார்கள் முஸ்லிம்கள் ஒற்றுமையாகயிறுந்தால் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் உதவிவந்துகொண்டுயிருக்கும்

    ReplyDelete
  6. கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் ஒரு ஆசாமி மைதானத்தில் பெண்களை திரையின்றி அனுமதிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால் தாள் 39 வது வருடம் அவ்வாறு முடிந்தது. மிம்பரில் நிட்பவர் முஹம்மது நபியும் அல்ல மைதானத்துக்கு வருபவர்கள் சகாப பெண்கள் போல் பார்த்த அணிந்து வருபவர்களும் அல்ல. முழுமையாக பெண்கள் பர்தா அணியும் காலம் வரை திரை தேவை. நேற்று நான் சொன்னதை தானே இன்று உலமா சபை அறிக்கையாக விட்டுள்ளது.

    தட்போது அதே ஆசாமி யாழ்ப்பாண முஸ்லிம்களில் அதிகாமனவர்கள் நரகம் புகுவார்கள் என்று சொல்லி சிக்கலில் மாட்டியுள்ளார். இவர் சம்பந்தமான விசாரணைகள் யாழ் உலமா சபையால் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. விரைவில் நல்ல தீர்ப்பு வரும்.

    ReplyDelete
  7. நபி (ஸல்) அவர்கள் மொத்தமாகவே 23 வருடங்கள்தான் (தீன் பணி) பிரச்சாரம் செய்தார்கள். பெண்களுக்கு திரையில்லாமல் தான் தொழுவித்தார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.