முஸ்லிம்கள் விரட்டப்பட்டும் பிரபாகரனுடன் புரியாணி சாப்பிட்டவர்களும் உள்ளனர்
கிழக்கு மாகாண அபிவிருத்தியின் நன்மைகளை அனுபவிக்கும் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு வழங்கி, அவர்களுடன் தொடர்ந்தும் செயற்படுவது பாரிய பொறுப்பாகும் என்று விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். இனவாதத்தை தூண்டி வாக்குகளை பெற்றுக்கொள்ள சிலர் முயற்சிக்கின்றனர். இது நாட்டுக்குப் பெரும் அழிவை ஏற் படுத்தும். எனவே, முஸ்லிம்கள் இந்த விடயத்தில் தெளிவுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இனவாத கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் சகவாழ்வை ஏற்படுத்த முடியாது. எனவே சகவாழ்வு மூலம் கிழக்கு மாகாண தேர்தலில் வெற்றி பெறலாம். இதற்கு முஸ்லிம்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்த விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்றுக்காலை கொழும்பிலுள்ள மகாவலி கேந்திரத்தில் இடம்பெற்றது.
இந்த செய்தியாளர் மாநாட்டில் பிரதியமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
யுத்த சூழ்நிலை காரணமாக சேதமடைந்த கிழக்கு மாகாணம் இன்று வேகமாக துரித அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சகல துறை அபிவிருத்திகளையும் இந்த பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களும் அனுபவித்து வருகின்றனர். இன வாதத்தை தூண்டி விட்டு அரசியல் பயணத்தைத் தொடர முடியாது. மாறாக சகல இனங்களுக்கு மத்தியில் சக வாழ்வை உருவாக்க வேண்டும். ஐ.ம.சு.முக்கு வாக்களிப்பது முஸ்லிம் பள்ளிவாசல்களை உடைப்பதற்கு என சிலர் பொய்ப்பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறானவர்கள் மித வாதத்தை எதிர்பார்க்கின்றனர்.
வடக்கிலிருந்து 24 மணி நேரத்திற்குள் முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். ஆனால் பிரபாகரனுடன் இணைந்து ஒரே இடத்தி லிருந்து புரியாணி சாப்பிட்டவர்களும் இருக்கின்றனர். ஆனால், நாங்கள் அவ் வாறு செய்யவில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அன்று தொடக்கம் இன்று வரை முஸ்லிம் மக்களுடன் இணைந்தே செயற்பட்டு வருகின்றார். அதனால்தான் இன்று சுதந்திரக் கட்சிக்கு முஸ்லிம்களின் வாக்கு கள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. எனவே, முஸ்லிம்கள் அரசாங்கத்திற்கு தமது வாக்குகளை வழங்க வேண்டும் என்றும் பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

who is doing invaatham now at publically and what is ur political party?wht are the political parties involving in ruling UPFA govermnment? wht is hela urumaya, freedon munnany wimal weerawansa party, and mutpokku munnani, these all inawaatha katchihal? wht a hell u talking being that member only for ur shake? pls dont talk rubbush from colombo and kandy where all these thing are happaning at the moment.where is the mosque are dmanaged where is the muslim prevented in praying ? these are not in east , but east muslim are strongly against for dt, but politician like u , who are selected byn ur own poeple who having this ruling government inwaatha probloem, u poeople no action nothing , use less politicians u r
ReplyDelete