Header Ads



க.பொ.த. உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்

க.பொ.த. (உ/த) பரீட்சை இன்று திங்கட்கிழமை 6 முதல் 30ம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார தெரிவித்தார்.

இவ் உயர்தரப் பரீட்சையில் 2 இலட்சத்து 20 ஆயிரத்து 535 பாடசாலை பரீட்சார்த்திகளும் 15 அயிரத்து 239 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர். இவர்களுள் 41 ஆயிரத்து 323 பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளும் அடங்குவர். இதேவேளை கடந்த வருடம் பரீட்சைக்குத் தோற்றியவர்கள் 355 பேரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களுக்கு அமைவாக அவர்களுக்கும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் 2093 நிலையங்களில் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன. இதன்படி புதிய பாடத்திட்டத்துக்கமைய ஆயிரத்து 746 பரீட்சை நிலையங்களும் பழைய பாடத்திட்டத்துக்கமைய 347 பரீட்சை நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளதெனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.