இனவாதம் பேசி சமூகத்திற்கு களங்கம் ஏற்படுத்திய ஹக்கீமையே நாம் எதிர்த்தோம்
ஏ.ஜே.எம்.ஹனீபா, எஸ்.எம்.எம்.ரம்ஸான்
"அக்கரைப்பற்றில் நோன்பு திறப்பதற்கு எவருக்கும் தடைகள் விதிக்கவில்லை. இனவாதத்தை பேசி நாட்டிற்கும், சமூகத்திற்கும், களங்கத்தை ஏற்படுத்துக்கின்ற ஹக்கீமையே நாம் எதிர்த்தோம்" என தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார். குறித்த மக்கள் எதிர்ப்புப் பேரணியில் தேசிய காங்கிரஸ் ஆதர்வாளர்கள் ஈடுபடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அக்கரைப்பற்றில் கடந்த திங்கட்கிழமை நடந்த எதிர்ப்பு பேரணி தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு இன்று புதன்கிழமை அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் அதாவுல்லா,
அக்கரைப்பற்றில் கடந்த திங்கட்கிழமை நடந்த எதிர்ப்பு பேரணி தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு இன்று புதன்கிழமை அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் அதாவுல்லா,
"அம்பாரை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மூன்று சமூகங்களையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஒரு நேர்மையான பொலிஸ் அதிகாரியும் யாருக்கும் பக்கச் சார்பாகவோ, அநீதியாகவோ செயற்படாத ஒருவர். இவரை குறைகூறி திரிவது தனது அரசியலுக்கு வங்குரோத்து நிலமை ஏற்பட்டுள்ளதையே காண முடிகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் புலிகள், தமிழர் விடுதலைக் கூட்டணி, நோர்வே மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றுடன் சேர்ந்து கிழக்கு மாகாணத்தை மீண்டும் வடக்குடன் இணைத்து மீண்டுமொரு யுத்தத்தை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றார்.
இதற்கு எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் இம்மாகாணத்தில் வாழ்கின்ற மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என நினைக்கின்றேன். அக்கரைப்பற்றில் நாங்கள் எவருக்கும் நோன்பு திறப்பதற்கு தடைகள் விதிக்கவில்லை.
இனவாதத்தை பேசி நாட்டிற்கும், சமூகத்திற்கும், களங்கத்தை ஏற்படுத்தி திரிகின்ற ஹக்கீமையே நாம் எதிர்த்தோம். முகமூடி மற்றும் கறுப்புடை அணிந்த முஸ்லிம் காங்கிரஸ் குண்டர்கள் சுமார் 35 பேருக்கு மேற்ப்பட்டவர்கள் வெளியூர்களிலிருந்து வரவழைக்கப்பட்டு அன்றிறவு அக்கரைப்பறிறில் நடமாடியதைக் கண்டு மக்கள் அச்சப்பட்டனர்.
இதன் விளைவாகவே அடுத்த நாள் ஹக்கீமுக்கு எதிராக அக்கரைப்பற்று மக்கள் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இங்கு எவ்விதமான தங்கு தடையின்றி முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் நோன்பு திறந்து விட்டுச் சென்றுள்ளார்கள்.
இது எங்களுடைய பெருந்தன்மையாகும். தேசிய காங்கிரஸ் இந்நாட்டில் வாழ்கின்ற மூவின சமூகங்களையும் அனுசரித்து செல்கின்ற ஒரு தேசிய கட்சியாகும். அதன் பக்கம் மக்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் தனது வாக்கு வங்கி குறைந்து காணப்படுவதால் அம்பாரை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை குறை கூறுகின்ற அளவிற்கு அவருடைய தலைமைத்துவம் மாறியிருக்கின்றது.
எந்த தயவும் இல்லாமல் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே கைப்பற்றும். குறிப்பிட்ட சில ஊடகங்கள் இனவாதத்தை தூண்டி மக்களை குழப்பும் சிந்தனைக்கு உள்ளாக்கி வருகின்றனர். மக்கள் தெளிவாக விளங்கி செயற்பட வேண்டும்" என்றார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அக்கரைப்பற்று மேயர் சக்கி அதாவுல்லா, கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான எம்.எல்.ஏ. அமீர். எம்.எஸ்.உதுமாலெப்பை, சட்டத்தரணி ஆரிப் சம்சுத்தீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

Yes, it's your right! In my opinion holding holy ifthar for the sole purpose of one's political advantages should be stopped. Ifthar should be given for the sole purpose of getting reward from almighty Allah. To me, even taking part in such politicalized ifthar is forbidden because such gatherings are not performed for Almighty Allah. Whoever perform it for such unethical worldly purposes, whether be Hakeem, be Athaulla or even Be His Excellancy the president, we being good Muslims should not take part in them.
ReplyDeleteதமது சுயநலத்துக்காக எதை எல்லாமோ பாவித்தவர்கள் இப்தார்ன் புனிதத்தையும் கெடுத்து விட்டார்கள்.அதவுல்ல கல்முனைக்கு வந்தால் மு காவினர் அவருக்கு கல் எறிகிறார்கள். மு கா தலைவர் அக்கறைபற்றுக்கு போக அதவுல்லா தடை. ஒவ்வொருவரும் தங்கள் அதிகாரம் உள்ள இடத்தில் சண்டியர்கள். இந்த இருவருக்கும் ஓட்டு போடும் முஸ்லிம்களில்தான் பிழை
ReplyDeleteஐயா அதாஉல்லா அவர்களே, நீங்கள் ஊடகங்களை உங்கள் இஷ்ட்டத்துக்கு ஏமாற்றலாம். ஆனால், சம்பவக் களத்தில் நின்று பார்த்த மக்களும், உங்களது உயிரையும், ரிஸ்க்கையும் தனது அதிகாரத்தில் வைத்திருக்கும் அல்லாஹ்வும் உங்களது திருகுதாளங்களை நன்றாக அவதானித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதனை மறந்துவிடாதீர்கள்.
ReplyDelete2012ம் ஆண்டில் ஹகீம் இனவாதம் பேசுவார் என்பதனால்தானா 2011ம் ஆண்டிலும் ஹகீமை அக்கரைப்பற்றுக்குச் வரவிடாமல் இதேபோன்ற கலகத்தை விளைவித்தீர்கள்? இந்தப் புருடாவையெல்லாம் நம்புவதற்கு மக்கள் ஒன்றும் உங்களுக்குப் பக்கத்தில் இருப்பவர்கள் போன்றவர்கள் அல்ல.
அரசுக்கு ஆதரவாக ஜெனீவாவுக்கு ஹகீம் செல்வதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் ”இவர் 2012 மாகண சபைத் தேர்தலில் இனவாதம் பேசுவார்” என்று காட்டிக் கொடுத்திருக்கலாமே. யாரை ஐயா முட்டாளாக்க முயற்சிக்கின்றீர்கள்?
இனவாதம் பேசும் ஹகீம் தம்புள்ளை பள்ளிவாயலுக்குச் செல்வதனை பௌத்தர்களோ, மன்னார் உப்புக் குளத்துக்குச் செல்வதனை தமிழர்களோ எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யவில்லையே! உங்களுக்கு அப்படி என்ன ரோஷ உணர்வு வந்தது?
ஐயா விதி யாரை விட்டது? பிர்ஆவ்னிலிருந்து பிரபாகரன் வரை மட்டுமல்ல லிபியாவின் கடாபி வரை பார்த்துவிட்டோம். பொறுத்திருக்கின்றோம். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான்.
ஐயா அதாஉல்லா அவர்களே!
ReplyDeleteகுறித்த மக்கள் பேரணியில் தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஈடுபடவில்லை என்கின்றீர்களே, இதே இணையத் தளத்தில் அக்கரைப்பற்று சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள படங்களில் பாதாகை தாங்கி நிற்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குள் முன்னாள் அக்கரைப்பற்று பிரதேச சபை உதவித்தவிசாளரும் உங்களது கட்சியின் பொது உறவு உத்தியோகத்தருமான SM சபீஸ், மு.கா.விலிருந்து உங்களுடன் அண்மையில் இணைந்து கொண்ட UL. உவைஸ், தற்போதைய அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் சோஸா நஜீமுடீன் எல்லம் நற்கின்றாகளே. இவர்களை எல்லாம் எப்போது கட்சியிலிருந்து நீக்கினீர்கள்?
சொல்லவே இலையே!