Header Ads



முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியல்ல

SFM

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இன்று புதன்கிழமை கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தது.

இதன்போது உரையாற்றிய கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம், அரசாங்கத்தின் இரண்டு பங்காளிக் கட்சிகளிடையே ஏற்பட்ட மோதல்நிலை தொடர்பில் செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியல்ல என்று தெரிவித்துள்ளார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளி கட்சியல்ல. அரசாங்கத்தினுள் 19 கட்சிகள் பிராந்திய ரீதியாக செயற்படுகின்றன.

எனவே, மாகாண சபைத் தேர்தலில் அவர்கள் போட்டியிடுகின்றார்கள். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸாக இருந்தாலும் அவர்களின் நிலைப்பாடுகளை எமக்கு தெரிவித்திருக்கிறார்கள். அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம்.

அதேவேளை, அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக இருதரப்பினருடனும் பேசியிருக்கின்றோம். இந்தமுறை மாத்திரம் இடம்பெற்ற மோதல் சம்பவமல்ல. ஏற்கனவே பல தடவைகள் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

 

 

1 comment:

  1. HON MINISTER PLEASE ARRANGE TO GIVE TWO DEPUTY MINISRTY TO THE SLMC PARTY TO FAIZAL CASSIM AND HARIS SLMC PROBLEM WILL BE SOLE?????????????????????????????????????? NOTHING ANY MUSLIM COMMUNITY PROBLEM HAKEEM NEED THIS TYPE OF HELP AT THE MOVEMENT.

    ReplyDelete

Powered by Blogger.